உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான 'சுப்ரமணியபுரம்' ஸ்வாதி... மீண்டும் நடிக்க வருகிறாரா?

By

சென்னை: நடிகை சுப்ரமணியபுரம் ஸ்வாதி நீண்ட இடைவெளிக்குப் பின் உடலை ஸ்லிம்மாக்கி எடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சசிகுமார் இயக்கிய சுப்பிரமணியபுரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை ஸ்வாதி.

அந்த படத்தில் இடம்பெற்ற கண்களிரண்டால் பாடல், ஸ்வாதியை இன்னும் பட்டி தொட்டிங்கும் கொண்டு சென்றது.

மலையாளத்திலும்

மலையாளத்திலும்

இதையடுத்து, இதற்குதானே ஆசைபட்டாய், வடகறி, யட்சன், யாக்கை, திரி உட்பட சில படங்களில் நடித்தார். தமிழ், தெலுங்கு படங்கள் தவிர, மலையாளப் படங்களிலும் நடித்து வந்தார்.

பைல்ட்டுடன் திருமணம்

பைல்ட்டுடன் திருமணம்

கேரளாவின் செல்லப்பிள்ளையாக மாறிய ஸ்வாதி, கடந்த 2018 ஆம் ஆண்டு, பைலட் விகாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

உடல் எடை

திருமணத்திற்குப் பின் நடிப்பதை நிறுத்திய ஸ்வாதி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருச்சூர் பூரம் என்ற மலையாள படத்தில் நடித்தார். இந்தப் படம் கடந்த மாதம் ரிலீச் ஆனது. இந்நிலையில் கொஞ்சம் உடல் எடை கூடியிருந்த ஸ்வாதி, எடை குறைத்து ஸ்லிம்மாகி உள்ளார் இப்போது.

ஸ்லிம் ஸ்டில்ஸ்

ஸ்லிம் ஸ்டில்ஸ்

தனது அந்த ஸ்லிம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இன்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். இணையத்தில் அது வைரலாகி வருகிறது. தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மீண்டும் நடிப்பதற்காக அவர் இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X