திரிஷா, விஜய்க்கு வாழ்த்து.. திருமணம் எப்போது தெரியுமா?.. அவரது குடும்பம் இதுதான்.. சுசித்ரா ஓபன்

சென்னை: திரிஷாவும், விஜய்யும் ஒன்றாக திருமணத்துக்கு சென்ற விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த பரபரப்பு அடங்குவதற்குள் இது நடந்தது. இந்த விஷயத்தை பற்றிய பேச்சுக்கள் ஓயும் முன்பே, சங்கீதா மீண்டும் நீதிமன்றம் சென்றிருக்கிறார். அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், 'நீலாங்கரை வீட்டில் என்னை தங்குவதற்கு விஜய் அனுமதிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்' என கோரிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.

விஜய்யிடமிருந்து விவாகரத்து கேட்டிருக்கிறார் சங்கீதா. டைவர்ஸ் கேட்டதோடு மட்டுமின்றி விஜய்க்கும், ஒரு நடிகைக்கும் இடையே இருக்கும் திருமணத்தை மீறிய உறவையும் அம்பலப்படுத்திவிட்டார். அது விஜய்யின் இமேஜில் பெரிய கரும்புள்ளியை குத்தியிருக்கிறது. பலரும் அந்த நடிகை திரிஷாதான் என சந்தேகித்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் அந்த திரிஷாவுடனேயே ஒரே உடையில் சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஒன்றில் கலந்துகொண்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் தவெக தலைவர். இதனால் ரசிகர்களும், தொண்டர்களும் செய்வதறியாது திகைக்கிறார்கள்.

Suchitra Reacts to Vijay Trisha Rumours Amid Sangeetha s New Court Petition
Photo Credit:

சங்கீதா மீண்டும் மனு: இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள்ளாகவே சங்கீதா மீண்டும் நீதிமன்றம் சென்றிருக்கிறார். அந்த மனுவில், 'நீலாங்கரை வீட்டுக்குள் என்னை அனுமதிக்க விஜய் மறுக்கிறார். அங்கேயே நான் தங்குவதற்கு விஜய் அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஏற்கனவே எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் அவர் ஜீவனாம்சம் வழங்கவும் கோரியிருக்கிறேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் - திரிஷா குறித்து பின்னணி பாடகி சுசித்ரா சமீபத்திய பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார்.

சுசித்ரா பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "எப்போதும் நான் சொன்னது சில காலம் கழித்துதான் நடக்கும். ஆனால் இது இரண்டே நாட்களில் நடந்துவிட்டது. இதுவும் திமுகவின் சதிதான். ஆம், திரிஷா வேறு காரில்தான் வந்தார். அவர் காரை திமுகவினர் பஞ்ச்சர் செய்துவிட்டார்கள். பிறகு விஜய் காரில் லிஃப்ட் கேட்டு வந்தார். இதையெல்லாம் சிரிக்காமல் சொல்கிறேன் பார்த்தீர்களா?.. இவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி வாழ்த்துகள் திரிஷா என்று சொல்ல வேண்டுமா?

வாழ்த்துகள் சொல்ல வேண்டும்: அவர்கள் இரண்டு பேருக்குள்ளும் அன்யோன்யமான ஒரு உறவு இருந்தால் கண்டிப்பாக வாழ்த்துகள் சொல்ல வேண்டும். எப்படி பார்த்தாலும் இது ஒரு நல்ல செய்திதான். விவாகரத்து விஷயத்தில் தனது செயல் மூலம் பதில் கொடுத்திருக்கிறார் விஜய். நீங்கள் நினைக்க வேண்டியதை நினைத்துக்கொள்ளுங்கள் என சொல்லியிருக்கிறார். இவர்கள் ரவி - கெனிஷா ஸ்டைலைத்தான் காப்பி அடித்திருக்கிறார்கள். அடுத்ததாக கோயிலுக்கு செல்வார்கள், நன்கொடை கொடுப்பார்கள். தேர்தல் வரைக்கும் நீங்கள் எவ்வளவோ பார்க்கப்போகிறீர்கள்.

இதுதான் குடும்பம் என்று காண்பித்துவிட்டார்: தேர்தலுக்கு தேவையான கன்ட்டென்ட்டுகளை இந்தத் தம்பதி கொடுக்கும். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது அது திரிஷாவுடன் என்பதை காண்பித்திருக்கிறார். தேர்தல் நடப்பதற்குள் அவர்களுக்கு திருமணம் நடக்காது. அதுவரை பில்ட் அப் கொடுப்பார்கள். எஸ்.ஏ.சி, ஷோபா சம்மதம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார் விஜய். இப்போது அவர்கள் லிஸ்ட்டில் திரிஷா சேர்ந்திருக்கிறார். இந்த விஷயம் தனக்கு பிளஸ்ஸாக மாறும் என்று நினைத்திருக்கிறார். இதற்கு ஷோபாவும், சந்திரசேகரும் உறுதுணையாக இருக்கிறார்கள்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X