திரிஷா மட்டுமில்லை.. ரம்யா கிருஷ்ணனையும் உள்ளே இழுத்து விடும் சுசித்ரா.. என்னதான் நடக்குது?

சென்னை: பின்னணி பாடகியான சுசித்ரா தமிழில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். பாடகியாக மட்டுமின்றி பத்திரிகையாளராகவும் சில காலம் பணியாற்றியவர். சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் இவரது பெயர்தான் பலமாக அடிபட்டது. அந்த விஷயத்துக்கு பிறகு கொஞ்ச வருடங்கள் அமைதியாக இருந்த அவர்; மீண்டும் பேட்டிகள் கொடுத்து பரபரப்பை கிளப்பிவருகிறார். அந்தவகையில் இப்போது திரிஷா மற்றும் ரம்யா கிருஷ்ணன் பற்றி அவர் பேசியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை கிளப்பியிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க பின்னணி பாடகிகளில் ஒருவர் சுசித்ரா. வேட்டைக்காரனில் இடம்பெற்ற ஒரு சின்ன தாமரை, ஜே ஜே படத்தில் மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே, போக்கிரி படத்தில் டோலு டோலுதான், என் செல்ல பேரு ஆப்பிள் என பல பாடல்களை பாடியவர். பாடகியாக மட்டுமின்றி ஆர்ஜேவாக சில காலமும், பத்திரிகையாளராக சில காலமும் பணியற்றியிருக்கிறார். திரைத்துறையில் மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. நடிகையாகவும் ஆய்த எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். எக்கச்சக்க படங்களுக்கு டப்பிங்கும் கொடுத்திருக்கிறார்.

Suchitra Targets Trisha Again Fresh Claims Spark Controversy
Photo Credit:

சுச்சி லீக்ஸ்: இப்படி திரைத்துறையில் அவர் செம பிஸியாக இருந்த காலத்தில் ஏராளமான நட்புக்களும் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க திடீரென ட்விட்டரில் சுச்சி லீக்ஸ் என்கிற ஹேஷ்டேக்கில் பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்காகின. சுசித்ரா பெயரில் வாரா வாரம் வந்துகொண்டே இருந்தன. எனவே அவர்தான் அத்தனையையும் லீக் செய்கிறார் என பிரச்னைகள் வெடித்தன. அந்த சமயத்தில் மன ரீதியாக சுசி பிரச்னையில் இருப்பதாகவும் அப்போது சுசித்ராவுக்கு கணவராக இருந்த கார்த்திக் கூறினார். அந்த விஷயத்துக்கு பிறகு சைலெண்ட்டும் ஆகிவிட்டார்.

மீண்டும் வந்த சுசித்ரா: மேலும் கார்த்திக்கையும் விவாகரத்து செய்துவிட்டார். சில கால அமைதிக்கு பிறகு புயல் போல் மீண்டும் வந்தார். வந்தவர் நேரடியாக பிரபலங்கள் பற்றி சரமாரியாக பேசி பேட்டிகள் கொடுத்தார். தனுஷ், திரிஷா, கார்த்திக், கமல்ஹாசன் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. திரைத்துறையில் இருக்கும் போதை கலாசாரங்கள் குறித்தெல்லாம் பேசினார். அவர் பேசுவதை நம்புவதா வேண்டாமா என ரசிகர்கள் குழம்பி போயினர். ஆனால் சுசி சொல்பவர்கள் யாருமே இதற்கு மறுப்பும் தெரிவிக்காமல் இருப்பதை பார்த்து மேலும் குழம்பினர் ரசிகர்கள்

திரிஷா பற்றி பேட்டி: அதுவும் நடிகை திரிஷாவை அட்டாக் செய்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார் சுசித்ரா. விஜய் - சங்கீதா விவகாரத்தில் முழுக்க முழுக்க திரிஷாவை டார்கெட் செய்திருக்கிறார். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த ஒரு பேட்டியில், "திரிஷா பாத்ரூமில் இருக்கும்போது ஒரு வீடியோ லீக்கானது. அது திரிஷாவாலேயே எடுக்கப்பட்ட வீடியோ. சக நடிகர் ஒருவருக்கு அனுப்புவதற்காக அவர் அந்த வீடியோவை ஷூட் செய்தார். கிளுகிளுப்புக்காக நிறைய செய்வார். அவர் தமிழ்நாட்டின் எப்ஸ்டின்.

நிறைய பார்ட்டிகள்: நிறைய காம பார்ட்டிகள் நடத்துவார். ஆண், பெண் பாரபட்சம் எல்லாம் அவருக்கு கிடையாது. பாருக்கு சென்று யாரையாவது தேர்ந்தெடுப்பார். நடிகை ரம்யா கிருஷ்ணனோடு புத்த முறைப்படி சோல் சிஸ்டர் திருமணம் செய்துகொண்டார். திருட்டுத்தனமாக சீனாவில் ஒரு பையனை தத்து எடுக்க பிளான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு சீக்ரெட் சொசைட்டி இருக்கிறது. திரிஷா பெரிய தீய சக்தி." என்று பேசி பெரிய குண்டை தூக்கிப்போட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X