திரிஷாவை கண்டாலே விஜய் பசங்களுக்கு ஆகாது.. ஷோபாவுடன் கூட்டு.. சுசித்ராவுக்கு வேற வேலையா இல்லையா?.. ஓவர் பேச்சு
சென்னை: நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வெற்றிகரமான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். பல ஹிட் படங்களில் நடித்து கெத்து காண்பித்த அவர்; கடந்த வருடத்தில் மட்டும் மூன்று படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்க்ள் எதுவும் சரியான வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இன்னும் சில மாதங்களில் படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் அவர் குறித்து பின்னணி பாடகி சுசித்ரா மோசமாக பேசியிருக்கிறார்.
லேசா லேசா படத்தில் தனது திரைத்துறை பயணத்தை ஆரம்பித்தாலும்; திரிஷாவுக்கு முதலில் ரிலீஸான படம் என்றால் மௌனம் பேசியதே. அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. முதல் படமே ஹிட்டானதால் அடுத்தடுத்து வாய்ப்புகள் கொட்டி கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்தி சரசரவென்று டாப் இடத்துக்கு சென்றார். பப்ளியாக இருந்தால்தான் தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதை சிம்ரனுக்கு பிறகு உடைத்து காட்டியவர் திரிஷா. வரிசையாக ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.
தெலுங்கிலும்: தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சென்சேஷனல் ஆனார். இங்கே எப்படி கிட்டத்தட்ட அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்தாரோ அதேபோல் டோலிவுட்டிலும் நடித்தார். ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த போதுதான் நடிகர் ராணா டகுபதியை அவர் காதலித்ததாகவும்; அதற்கு ராணாவின் குடும்பத்தின் ஒத்துக்கொள்ளாததால்தான் அந்தக் காதல் திருமணம் வரை செல்லவில்லை என்றும் எக்குத்தப்பாக தகவல்கள் எல்லாம் பரவின. ஆனால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே மௌனத்தைதான் பதிலாக தந்தார்கள்.

கம்பேக் தந்த திரிஷா: நன்றாக போய்க்கொண்டிருந்த திரிஷாவின் மார்க்கெட் திடீரென சரிவை சந்தித்தது. இனிமேல் அவர் அவ்வளவுதான்; புதிதாக வந்திருக்கும் ஹீரோயின்களுடன் அவரால் போட்டியே போட முடியாது என்றெல்லாம் பலர் சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் பிரேம்குமார் இயக்கத்தில் நடித்த 96 திரைப்படம் அந்த பேச்சுக்களை எல்லாம் தவிடுபொடியாக்கி திரிஷாவை ஜானுவாக கொண்டாட வைத்தது. அந்தப் படத்திலிருந்து மீண்டும் படு பிஸியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
திரிஷாவை பற்றி சர்ச்சைகள்: இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சில காலமாகவே திரிஷாவின் பெயரை பொதுவெளிகளில் இழுத்து ஆளாளுக்கு இஷ்டத்துக்கு பேசிவருகிறார்கள். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்கூட அரசியல் தளத்தில் திரிஷா பெயரை இழுத்து கொச்சையாக பேசியதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் கடும் கண்டனத்தை பதிவு செய்தது. திரிஷாவும் தன் பங்குக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இந்நிலையில் பின்னணி பாடகி சுசித்ரா மீண்டும் திரிஷா குறித்து ஒரு பேட்டியில் ஓவராக பேசியிருக்கிறார்.
சுசித்ரா பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "பல விஷயங்களிலிருந்து விஜய்யை சங்கீதா காப்பாற்றியிருக்காங்க. திரிஷாவுடனான பழக்கத்திலிருந்து மீட்க சங்கீதா முயற்சித்தாலும் இவர் அந்த சாக்கடையில் மீண்டும் மீண்டும் போய் விழுந்தார். ஒருகட்டத்தில் சாக்கடையில் இருக்கும் திரிஷா எனும் முதலை விஜய் ஃபேமிலியை கட்டுப்படுத்த ஆரம்பித்துவிட்டது. மகளை ஸ்டேஜில் ஏறி நடனம் ஆட சொல்லு, மகனை இயக்குநராக சொல்லு என அத்தனையும் விஜய்யிடம் சொன்னது திரிஷாதான்.
பசங்க கூப்பிடுவது: இரண்டு பசங்களும் சினிமாவுக்குத்தான் வரப்போறாங்கனு சொல்லு என எக்கச்சக்க ஐடியாக்களை கொடுத்தார். சாத்தான் ஓத ஆரம்பித்துவிட்டது. ஷோபா சந்திரசேகரையும் கட்டுப்படுத்த ஆரம்பித்தார் திரிஷா. இரண்டு பேரும் சேர்ந்து பல முறை ஷாப்பிங்கிற்கு சென்றிருக்கிறார்கள். இதை சங்கீதா விரும்பமாட்டார்தானே. ஷோபாவும், திரிஷாவும் சேர்ந்து விஜய்யை மூளை சலவை செய்து சங்கீதாவை அடிக்க கை ஓங்க வைத்தார்கள். அப்போதிருந்து திரிஷாவை விஜய்யின் மகனும், மகளும் அசிங்கமாக கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள்" என்றார்கள்.


Click it and Unblock the Notifications















