திரிஷா, விஜய் சேர லோகேஷ் கனகராஜ்தான் காரணம்.. 6 மாதங்களுக்காக அதை செய்தார்.. சுசித்ரா ஓவர் பேச்சு
சென்னை: விஜய்யிடமிருந்து தனக்கு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு சங்கீதா செல்ல; விஜய்யும், திரிஷாவும் ஒன்றாக ஒரு திருமணத்துக்கு வந்திருந்தார்கள். அது இரண்டு பேருக்கும் கண்டனங்களை பெற்றுக்கொடுத்தது. நன்றாக இருந்த குடும்பத்தை கெடுத்துவிட்டாரே என்று திரிஷாவை பலரும் விளாசிவருகிறார்கள். இந்நிலையில் பிரபல பின்னணி பாடகியும், தொடர்ந்து சர்ச்சையாக பேசிவருபவருமான சுசித்ரா பேசியிருக்கும் விஷயம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியிஉர்க்கிறது.
விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட சங்கீதா; அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விவாகரத்து கோரி நீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார். தனது கணவருக்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருக்கிறது என்பது அவர் கூறிய குற்றச்சாட்டுக்களிலேயே பிராதனமாக படுகிறது. பலரும் அந்த நடிகை திரிஷாதான் என்று கூற ஆரம்பித்தார்கள். ஆனால் உறுதியாக தெரியாத வரை மூன்றாவது மனுஷியை இதில் இழுப்பது முறையல்ல என ஒருதரப்பினர் கருதினார்கள்.

உறுதி செய்த விஜய், திரிஷா?: ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல்; ஒரே கலர் டோனில் உடை அணிந்துகொண்டு திருமணத்துக்கு விஜய்யும், திரிஷாவும் ஜோடியாக வந்தது; 'நீங்கள் இந்த விஷயத்தில் திரிஷாவை சந்தேகப்படாதீர்கள்; அவர்தான் என உறுதி செய்துகொள்ளுங்கள்' என தளபதி உணர்த்துவது போல் ஆகிவிட்டது. முதலில் சங்கீதாவை சரமாரியாக சைபர் தாக்குதல் செய்த விர்ச்சுவல் வாரியர்ஸ்; இந்த ஜோடியான வருகைக்கு பிறகு திரிஷாவை கிழிக்கிறார்கள். விஜய்க்கு எதிராகவும் தங்களது கருத்தினை பதிவு செய்தார்கள்.
கண்டுகொள்ளாத திரிஷா: ஆனால் இந்த விஷயத்தை எல்லாம் திரிஷா காதில் போட்டுக்கொள்வதாகவே தெரியவில்லை. பார்த்திபன் ஒரு விழாவில், 'குந்தவையை வீட்டிலேயே குந்த வையுங்கள். பிரச்னை வராமல் இருக்க' என பேசியதற்கு மட்டும் எதிர்வினை ஆற்றினார். மற்றபடி அனைவருக்கும் அவர் பதில் சொல்வதற்கு தயாராக இல்லை. வழக்கம்போல் தனது ஃபன் ஆக்ட்விட்டிகள் உள்ளிட்டவை குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் மேல் போஸ்ட் போட்டுக்கொண்டே வருகிறார். இதற்கிடையே லியோ படத்தில் மட்டும் விஜய்யையும், திரிஷாவையும் சேர்ந்து நடிக்க வைக்காமல் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்காது என ஒரு தரப்பினர் லோகேஷ் கனகராஜையும் இதில் பேசிவருகிறார்கள்.
சுசித்ரா பேட்டி: இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா இந்த விவகாரம் பற்றி புதிய குண்டை தூக்கி போட்டிருக்கிறார். ரியல் ஒன் மீடியா என்ற யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், "திரிஷாவிடம் வாலை சுருட்டிக்கொண்டு நாய்க்குட்டி போல்தான் அடங்கி இருப்பார் விஜய். விஜய், திரிஷா கூத்தாடிகள்தானே. அந்தப் புத்திதான் அவர்களுக்கு இருக்கும். எப்படியோ திரிஷா மீண்டும் விஜய் வாழ்க்கைக்குள் வந்துவிட்டார். இது அவரது பவரைத்தான் காண்பிக்கிறது.
லோகேஷ் கனகராஜ் பற்றி: திரிஷாவும், விஜய்யும் ஆறு மாதங்கள் ஜல்சா செய்வதற்கு லோகேஷ் கனகராஜ்தான் விளக்கு பிடித்தார். திரிஷா கருப்பு இதயம் கொண்ட் ஒரு பெண். எப்ஸ்டீனின் பெண் வெர்ஷன்தான் இந்த திரிஷா. அவர் மிகப்பெரிய சீக்ரெட் சொசைட்டி வைத்திருக்கிறார். நிறைய காம பார்ட்டிகள் நடத்துவார். யாராலும் அவரை கன்ட்ரோல் செய்ய முடியாது. கன்ட்ரோலில் இருப்பது மாதிரி நடிப்பார். திரிஷாவின் கரியர் காலி ஆகிவிட்டது. கருவாடு மாதிரி ஆகிவிட்டார். விஜய்க்கு எப்போதுமே சுய புத்தி கிடையாது. அவரே ஒரு அரக்கன்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications















