ஊ அண்டாவா சமந்தாவை ரொம்ப பிடிக்கும்.. அவர் அழுதால் மட்டும்.. கண்ணீருடன் பேசிய பிரபல இயக்குநர்
சென்னை: தமிழ், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா சில ஆண்டுகளாக படங்களே நடிக்காமல் இருக்கிறார். தற்போது தெலுங்கில் ஒரு படத்தையும் தயாரித்து முடித்திருக்கிறார். அப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படங்களில் நடிக்காமல் இருந்தாலும் அவருக்கான மவுசு குறையவில்லை. இந்நிலையில், சமந்தா குறித்து பிரபல பெண் இயக்குநர் கண் கலங்கி பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்தியாவை கலக்கிக்கொண்டிருந்த சமந்தா ஃபேமிலி மேன் வெப் தொடர் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். மேலும், இதில் அவர் நடித்த காட்சிகளும் சர்ச்சையானது. அதன் பிறகு படங்களில் ஏதும் நடிக்காமல் தனது உடல்நலனில் கவனம் செலுத்தி வந்தார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான . சிட்டாடல் வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் சமந்தா அட்லீ - அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று இயக்குநர் சுகுமார் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் நடிக்க இருக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. படங்களில் நடிக்காமல் இருந்தாலும் ரசிகர்கள் அவரை மறக்கவில்லை. அவர் மீது அதீத அன்பை பொழிந்து வருகிறார்கள்.

பிரம்மாண்ட படம்: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டு்ம கம்பேக் கொடுக்க இருக்கும் சமந்தா ஆக்சன் படங்களில் நடிக்க விரும்புவதாக அவரே தெரிவித்திருக்கிறார். ஹீரோக்களுக்கு இணையான கதாப்பாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிப்பது தான் அவரது ஆசையாம். அதற்காக முன்னணி இயக்குநர்களிடம் பேசி வருவதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. சீக்கிரம் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபல பெண் இயக்குநர் ஒருவர் சமந்தாவை புகழ்ந்து பேசியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா அழுதால் நானும் அழுவேன்: இறுதிச்சுற்று படத்தின் மூலம் இந்திய சினிமாவையே தன்வசப்படுத்தியவர் இயக்குநர் சுதா கொங்காரா. அதைத்தொடர்ந்து சூரரைப் போற்று படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். தற்போது பராசக்தி படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், விருது விழாவில் கலந்துகொண்ட சுதா கொங்காரா நடிகை சமந்தா குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது, "சமந்தாவுடன் கடந்த 5 ஆண்டுகளாக நெருங்கி பழகி வருகிறேன். அவருக்கு மிகப்பெரிய ரசிகை நான். சமந்தா எதிர்த்து போராடும் விதம் எனக்கு பலத்தை தந்திருக்கிறது. அவள் ஒரு இன்ஸ்பிரேஷன். அவர் அழுதால் நானும் அழுவேன் என எமோஷனலாக தெரிவித்தார்.

பின்னர் தொகுப்பாளினி சுதா கொங்காராவிடம் உங்களது இயக்கத்தில் சமந்தாவை எப்போது பார்க்கலாம் என கேள்வி கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த அவர், கண்டிப்பாக சமந்தாவுடன் இணைந்து படங்கள் பண்ணுவேன். விரைவில் நடக்கும். எனக்கு சமந்தாவின் ஊ அண்ட்டாவா பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றார். பின்னர் பேசிய சமந்தா எனக்கு ஆக்சன் படம் பண்ண வேண்டும். அதற்கு தயாராகி வருகிறேன் என்றும் தொகுப்பாளினியிடம் தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











