உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்: ஃபீல் பண்ணும் ராய் லட்சுமி

By Siva

சென்னை: மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டேன், உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் என்று நடிகை ராய் லட்சுமி தெரிவித்துள்ளார்.

ராய் லட்சுமிக்கு பெயர் மாற்றியும் மார்க்கெட் ஒன்றும் பிக்கப்பாகவில்லை. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜுலி 2 இந்தி படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

இந்நிலையில் படம் குறித்து ராய் லட்சுமி ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது,

படம்

படம்

நடிக்க வேண்டும் என்பதற்காக படங்களை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜூலி 2 இந்தி படத்தில் பிசியாக இருந்துவிட்டேன்.

கஷ்டம்

கஷ்டம்

ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உடல் நலம், மனநலம் பாதிக்கப்பட்டேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன்.

கோலிவுட்

கோலிவுட்

ஜூலி 2 படத்தால் கோலிவுட் மற்றும் டோலிவுட் பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது. நான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம்.

மம்மூட்டி

மம்மூட்டி

மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் ஒன்று மம்மூட்டி சாரின் படம். நான் ஒல்லியாக இருப்பதால் அந்த வாய்ப்புகள் கை நழுவிப் போனது.

ஜூலி 2

ஜூலி 2

ஜூலி 2 படத்திற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன்.

உடல்

உடல்

உடல் எடையை ஏற்றி, ஏற்றி குறைத்ததில் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இந்த காரணத்தால் படப்பிடிப்பு கூட தாமதமானது. என் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன் என்கிறார் ராய் லட்சுமி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X