»   »  கண்களால் பேசும் சுகா...

கண்களால் பேசும் சுகா...

Subscribe to Oneindia Tamil

இப்போது தான் வந்தார். வந்தவேகத்தில் கையில் மூன்று படங்களுடன் மற்ற புதுமுக நடிகைகள் வயிற்றில் புளியைக்கரைத்திருக்கிறார் சுகா.

முதல் படத்தில் பேயாக நடித்த இவருக்கு மிக வேகமாகவே தேவதைகள் வரிசையில் இடம் கிடைத்துவிட்டது.

கோலிவுட்டின் நேக்கு போக்குகளை மிக விரைவில் கற்றுக் கொண்டுவிட்ட இந்த தெலுங்குலப் பெண் மளமளவென தமிழில்அடுத்தடுத்து புதிய படங்களில் புக் ஆகி வருகிறார்.

சுஹாசினி என்ற ஒரிஜினல் பெயர் கொண்ட சுகா, தெலுங்கில் ஜெயா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். ஆனால், படமும்பெரிதாக போகவில்லை. சுகாவையும் கண்டுகொள்ள ஆள் இல்லை.

இதனால் கோடம்பாக்கத்தில் நூல் விட்டுப் பார்த்தார். ஆனால், பேய் வேடம் தான் கிடைத்தது. அது படத்தில் பயப்படாமல்பேயாக நடித்த சுகா, அதில் ஸ்னேகாவை மிரட்டோ மிரட்டு என மிரட்டி எடுத்துவிட்டார்.

அடுத்து ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடவாவது சான்ஸ் கேட்டு அலைந்தவருக்கு இராம.நாராயணனின் உருவத்தில் அதிர்ஷ்டம்வந்தது. கருணாநிதி கதை, வசனம் எழுதிய மண்ணின் மைந்தன் படத்தில் சத்யராஜின் மகன் சிபிக்கு ஜோடியாக நடித்தார்.

இதைத் தொடர்ந்து இன்னொரு வாரிசு நடிகரான செந்திலின் மகன் நவீனுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார். படத்தின் பெயர் உன்னைஎனக்குப் பிடிச்சிருக்கு. இதில் இன்னொரு ஹீரோயினாக நடிப்பது அவளோட ராவுகள் உள்ளிட்ட பல பலான படங்களில் நடித்தமலையாள அந்தகால ஹீரோயின் ஜெயபாரதியின் தங்கை மகன்.

இதில் ஹீரோயினாக நடித்து வரும் சுகா, அதற்குள் ஞாபகம் வருதே என்ற படத்திலும் ஹீரோயின் வாய்ப்பைப் பிடித்திருக்கிறார்.இன்னொரு பெயர் சூட்டாத படத்திலும் இவரை ஹீரோயினாக்க பேசி வருகிறார்கள்.

இவரது வேகம் கண்டு கோலிவுட்டில் ஆச்சரியம் காட்டுகிறார்கள்.

துணைக்கு யாரையும் அழைத்துப் போகாமல், தானே விறுவிறுவென டைரக்டர்களை தானே நேரில் போய் பார்க்கிறார்,கலகலவென பேசுகிறார். அப்படியே தயாரிப்பாளர்களையும் படியேறிப் போய் சந்திக்கிறார். அங்கும் கலகல.. சிரிப்பு தான்.

சம்பளம் குறித்தெல்லாம் பேச்சே பேசாமல் வாய்ப்பு மட்டுமே கேட்கிறார். இப்படித்தான் மூன்று படங்களும் க்ளிக்ஆகியிருக்கின்றன.

பல நடிகைகளும் சம்பளத்துக்கு ஆள்போட்டு, மீடியேட்டர்களுக்கு கமிஷன் தந்து வாய்ப்புக்கு அலைந்து கொண்டிருக்க சுகாவின்இந்த நேரடி அப்ரோச் அவருக்கு நிறையவே கை கொடுத்திருக்கிறது.

கையில் 3 படங்களோடு தொடர்ந்து சான்ஸ் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார் சுகா என்ற சுஹாசினி.

தமிழில் அழகிய கண்கள் கொண்ட நாயகிகளுக்கு எப்போதும் ஒரு மவுசு உண்டு. அந்த வகையில் போதையூட்டும் கண்களுடன்வலய வரும் சுஹாசினி நிச்சயம் ஒரு ரவுண்டு வர வாய்ப்பிருக்கிறது.

Read more about: cinema, suga, tamil news, tamilnadu, thatstamil

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil