»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

34 வயதான விஜியின் தற்கொலை மூலம் நடிகைகள் தற்கொலை பட்டியலில் மேலும் ஒரு நடிகை சேர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகைகள் படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சில்க் ஸ்மிதா ஆகியோரை அடுத்து இப்போது விஜிதற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவள் ஒரு தொடர்கதை படத்தில் படாபட் என்ற காரெக்டரில் வந்து கலக்கிய ஜெயலட்சுமி தற்கொலை செய்துகொண்டார்.

டைரக்டர் பாலுமகேந்திராவால் பசி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷோபா பின்னர் அவரது காதலியாகவேமாறினார். இருவரும் சேர்ந்தே வாழ்ந்து வந்தனர். திடீரென ஒரு நாள் ஷோபா தற்கொலை செய்து கொண்டார்.

தாடிக்கரர் ஒருவருடன் நீண்ட காலமாக பழகி வந்த சில்க் ஸ்மிதா வீட்டில் தூக்க மாத்திரைகள் உண்டு தற்கொலைசெய்து கொண்டார்.

பெங்களூரைச் சேர்ந்த விஜி சமீபகாலமாக தனது தந்தை அஸ்வத்துடன் தான் சென்னிைல் வசித்து வந்தார்.விஜியின் தாயார் லலிதா சில ஆண்டுகளுக்கு முன்பு தான் காலமானார்.

தற்கொலை நடந்த விஜியின் வீட்டில் போலீசார் ஒரு கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அது விஜி எழுதிய தற்கொலைக் கடிதம்.

அந்தக் கடிதத்தில், என்னுடை சாவுக்கு அவர் தான் காரணம். அவரை கடவுள் தண்டிப்பார் என்று எழுதியுள்ளார்.

விஜி குறிப்பிட்டுள்ள அந்த ""அவர் சினிமா இயக்குனர் மற்றும் கேமராமேனான ஏ.ஆர்.ரமேஷ் தான். ஏற்கனவேதிருமணமான இந்த ரமேஷ் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டார் என்று விஜி அதில் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் நடிகை ஷர்மிளியும் தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலை செய்ய முயன்றார். வில்லன் நடிகர் பாபு ஆண்டனி தன்னைகாதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவர் தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதால் உயிர் பிழைத்தார்.

Read more about: actors, actress, cinema, sucides
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil