சிவாஜி கணேசனின் பேரனை மணந்த சுஜா வருணி
Recommended Video

சென்னை: பிக் பாஸ் புகழ் சுஜா வருணி நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை இன்று திருமணம் செய்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. அவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்.
அவர்கள் திருப்பதிக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியானபோது தான் காதல் விவகாரம் பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது.

திருமணம்
சிவகுமார், சுஜா வருணியின் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. இதையடுத்து சென்னையில் உள்ள கிரவுன் பிளாசாவில் அவர்களின் திருமணம் இன்று காலை நல்லபடியாக நடந்தது. சுஜா வருணி தன் வாழ்வில் வந்தது தான் செய்த பாக்கியம் என்று சிவகுமார் முன்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்
சுஜா வருணிக்கு அப்பா இல்லாததால் அவர் ஸ்தானத்தில் இருந்து திருமண சடங்குகளை செய்து வைப்பேன் என்று உலக நாயகன் கமல் ஹாஸன் தெரிவித்திருந்தார். ஆனால் திருமணத்தில் எடுத்த புகைப்படங்களில் கமல் இல்லை. சுஜாவும் கமல் ஹாஸனை அப்பா என்றே அழைத்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் சுஜாவுக்கு அப்பா கிடைத்துள்ளார்.

வாழ்த்து
சுஜா வருணி, சிவகுமார் திருமண நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார், நடிகைகள் ராதிகா சரத்குமார், ஸ்ரீ ப்ரியா, சுஹாசினி மணிரத்னம், விஜி சந்திரசேகர், பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

சமூக வலைதளம்
சுஜா வருணி, சிவகுமார் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
புகைப்படம்
முன்னதாக நேற்று மாலை நடந்த சடங்குகளின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டார் சிவகுமார்.


Click it and Unblock the Notifications











