»   »  சுஜி வயசு அப்படி...

சுஜி வயசு அப்படி...

Subscribe to Oneindia Tamil

சுஜிபாலாவின் சிலிர்க்க வைக்கும் கிளாமர் பிளஸ் நடிப்புடன் வயசு அப்படி என்ற பெயரில் ஒரு படம்தயாராகிறது.

சின்னப் பொண்ணு சுஜிபாலா கிளாமருக்குத் தாவி கொஞ்ச நாள்தான் ஆகிறது என்றாலும் கூட அவரை வைத்துகணிசமான படங்கள் தயாரிப்பில் உள்ளன. கிளாமர் காட்ட தயக்கமே காட்டுவதில்லை என்பதால் சுஜிபாலாவைத்தேடி நிறையப் படங்கள் ஓடி வருகிறதாம்.

அவரும் வருகிற படங்களையெல்லாம் வாங்கி பையில் போட்டு நிரப்பிக் கொள்கிறாராம். கதையைப் பற்றிக்கவலையே படுவதில்லையாம்.

ஒரே ஒரு கண்டிஷன் மட்டுமே போடுகிறார், அதாவது படத்தில் நான் மட்டுமே ஹீரோயினாக இருக்க வேண்டும்,குத்துப் பாட்டுக்கும், கிளாமருக்கும் தனித்தனியாக ஆளைத் தேட வேண்டாம். எல்லாவற்றையும் நானே சிறப்பாகசெய்து தருகிறேன் என்பதுதான் அந்த கண்டிஷன்.

இதுபோதாதா தயாரிப்பாளர்களுக்கு? சந்தோஷமாக புக் செய்து வருகிறார்கள் சுஜியை. அப்படி வந்த படம்தான்வயசு அப்படி. தலைப்பிலேயே படத்தின் கதை புரிந்திருக்கும். விடலை வயசு பசங்க, பொண்ணுங்களைப் பத்தினகதையாம்.

அதற்கு சுஜிதான் சூட் ஆவார் என்று வேண்டி விரும்பி ஒப்பந்தம் செய்துள்ளனராம்.

படத்தின் கதையை தெளிவாக முன் கூட்டியே சுஜியிடம் சொல்லி விட்டார்களாம். அவரும் கவலையே படாதீங்க,கலக்கிப்புடலாம் என இயக்குனருக்கே தைரியம் கொடுத்துள்ளாராம்.

இப்படத்தை இயக்குவது யார் தெரியுமா? ராஜாஜி என்பவர்தான் இயக்குகிறார். இதற்கு முன்பு எஸ்.மேடம்,விந்தியா நடித்துள்ள அழகு நிலையம் ஆகிய படங்களை இயக்கியவர் தான் இவர்.

அப்படின்னா சமாச்சாரங்களுக்கு பஞ்சம் இருக்காது என நம்புவோம்..

Read more about: suji bala in vayasu appadi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil