»   »  சுஜி.. ரொம்ப தாராளம்

சுஜி.. ரொம்ப தாராளம்

Subscribe to Oneindia Tamil
சுஜி பாலா முழுக்க குதித்து விட்டாராம். நடிப்புக் கண்மாயில் அல்ல கவர்ச்சிக்கடலில்.

சந்திரமுகியில் குட்டி ரோலில் வந்த கும்மாங்கு குட்டி இப்போது கிளாமர் நாயகியாகடான் சேரா, வஞ்சகன் ஆகிய படங்களில் கலக்கி எடுத்துள்ளார். அதில் டான் சேராவெளியாகி சுஜி பாலாவை ரசிகர்கள் ரசித்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

டான் சேராவில் ரஞ்சித் நடிப்பை விட சுஜி பாலாவின் கிளாமரைத்தான் கோலிவுட்புள்ளிராஜாக்கள் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

டான் சேராவில் கிடைத்த வரவேற்பையடுத்து சூட்டோடு சூடாக புதிய படவாய்ப்புகளைத் தேடி படு தீவிரமாக களம் இறங்கி விட்டார் சுஜி பாலா.

தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை போனிலும், நேரிலும் போய் பார்த்து குசலம்விசாரித்து வாய்ப்பு தேட ஆரம்பித்துள்ளார் சுஜி. கதை முக்கியமில்லை, சம்பளத்தைக்கூட நச்சரிக்க மாட்டேன். நச்சுன்னு கிளாமர் காட்ட ரெடி, எப்படி வேண்டுமானாலும்யூஸ் பண்ணிக்கலாம் என்று ஓபனாகவே பேசுகிறாராம் சுஜி.

டான் சேராவை விட வஞ்சகனில் விஸ்வரூபம் எடுத்துள்ளாராம் சுஜி. அவரது கிளாமர்ரசிகர்கள் மனதில் ரொம்ப நாளைக்கு வியாபித்துக் கிடக்கும் என்கிறதாம் வஞ்சகன் படயூனிட்.

நடிக்க வந்தாச்சு, இப்படித்தான் நடிப்பேன், அப்படித்தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பது தப்பு. எப்படி நடிக்கச் சொல்றாங்களோ அப்படி நடித்து விட்டுப்போவதுதான் நல்ல நடிகைக்கு அடையாளம் என்று தத்துவார்த்தமாக பேசுகிறார் சுஜிபாப்பா.

இப்ப உள்ள சினிமா டிரெண்ட், கிளாமர்தான். நடிப்பு ரெண்டாம் பட்சம்தான். முதலில்நமது உடல் அழகை சரியாக வெளிக் காட்ட வேண்டும், கூடவே நடிப்பையும் கொட்டவேண்டும். ரெண்டுமே என்னிடம் எக்குத் தப்பாக இருக்கிறது, அப்புறம் என்ன,எகிறிப் பாய வேண்டியதுதானே என்று படு ஜாலியாக பேசுகிறார் சுஜி.

பாப்பா பொழச்சுக்கும்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil