Sukanya - அட சுகன்யா மகளா இவங்க.. ஹீரோயின் மாதிரி இருக்காங்களே.. ட்ரெண்டாகும் புகைப்படம்

சென்னை: நடிகை சுகன்யா 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். கமல் ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் இந்தியன் படத்தில் கமல் ஹாசனுக்கு டஃப் கொடுத்து கஷ்டமான மேக்கப்புகளை போட்டுக்கொண்டு நடித்தார். அது அவருக்கு சிறந்த பெயரை பெற்றுக்கொடுத்தது. சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் தற்போது சின்னத்திரையில் தலை காண்பிக்கிறார். இந்தச் சூழலில் அவரது மகள் புகைப்படம் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

பாரதிராஜா இயக்கத்தில் இயக்கத்தில் உருவான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். தனது அழகாலும், திறமையாலும் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவருக்கு பட வாய்ப்புகள் பெருகின. இதன் காரணமாக விஜயகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பலராலும் அறியப்பட்ட நடிகையாக மாறினார் சுகன்யா.

 Sukanya Daughter Photo Goes Trending on Social Media

சின்ன கவுண்டர்: ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து மெகா ஹிட்டான படம் சின்ன கவுண்டர். அதில் சுகன்யா ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் வெகுளித்தனமான கிராமத்து பெண்ணாக தோன்றிய அவர் எமோஷனல் காட்சிகளில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக் அவருக்கு ரசிகர்களும் பெருகினர். அதேபோல் மகாநதி படத்திலும் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். முக்கியமாக இந்தியன் படத்தில் கமல் ஹாசனுக்கு மனைவியாக வயதான கெட்டப்பில் நடித்து அசத்தியிருந்தார் சுகன்யா.

சினிமாவிலிருந்து ஒதுங்கிய சுகன்யா: சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வந்த சுகன்யா ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகையாக மட்டுமின்றி சில சோலோ ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் அவர், கன்னத்தில் முத்தமிட்டால் படத்த்தில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம், பிரிவு: இந்தச் சூழலில் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் திருமணமாகி ஒரே ஆண்டில் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். திருமணமாகி சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெறும் அளவுக்கு சுகன்யாவின் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என பலரும் யூகித்துவந்தனர். ஆனால் அவர் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வந்தார்.

குடும்பம்: சுகன்யாவுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். கணவரை பிரிந்த சுகன்யாவுடன் அவர்கள் வசித்துவருகிறார்கள். இந்நிலையில் சுகன்யாவின் மகள் புகைபடம் ஒன்று வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் சுகன்யா மற்றும் சுகன்யாவின் தாய் ஆகியோருடன் இருந்தபடி அவர் செல்ஃபி எடுக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹீரோயின் மாதிரியே இருக்காங்களே. கண்டிப்பாக சுகன்யா மகள் சினிமாவில் அறிமுகம் ஆகலாம் என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X