யாரும் என்னை அழைக்கவில்லை.. நான் தயாராக இருந்தேன்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா.. சுகன்யா பாவம்தான்
சென்னை: நடிகை சுகன்யா கோலிவுட்டில் 80கள் இறுதியிலும் 90களிலும் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். மிகச்சிறந்த நடிகை என்று பெயர் எடுத்த அவர் கமல் ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்த அவர் திடீரென திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை. இந்தச் சூழலில் தான் எதற்காக சினிமாவிலிருந்து ஒதுங்கினேன் என்பது குறித்து பேசியிருக்கிறார்.
புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான சுகன்யா அடிப்படையில் ஒரு பரதநாட்டிய கலைஞர். தனது அழகாலும், திறமையாலும் முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த அவருக்கு பட வாய்ப்புகள் பெருகின. இதன் காரணமாக விஜயகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பலராலும் அறியப்பட்ட நடிகையாக மாறினார் சுகன்யா.

சின்ன கவுண்டர்: ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்து மெகா ஹிட்டான படம் சின்ன கவுண்டர். அதில் சுகன்யா ஹீரோயினாக நடித்திருந்தார். அந்தப் படத்தில் வெகுளித்தனமான கிராமத்து பெண்ணாக தோன்றிய அவர் எமோஷனல் காட்சிகளில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக அவருக்கு ரசிகர்களும் பெருகினர். அதேபோல் மகாநதி படத்திலும் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இதனால் குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றார்.
சினிமாவிலிருந்து ஒதுங்கிய சுகன்யா: சினிமாவில் மிகப்பெரிய ரவுண்டு வந்த சுகன்யா ஒருகட்டத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் சன் டிவியில் ஒளிபரப்பான ஆனந்தம் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார். நடிகையாக மட்டுமின்றி சில சோலோ ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் அவர், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம், பிரிவு: இந்தச் சூழலில் கடந்த 2002ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபால் என்பவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். ஆனால் திருமணமாகி ஒரே ஆண்டில் இரண்டு பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். திருமணமாகி ஒரே ஆண்டில் விவாகரத்து பெறும் அளவுக்கு சுகன்யாவின் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என பலரும் யூகித்துவந்தனர். அதேசமயம் அவரை பற்றி சில வதந்திகளும் அவ்வப்போது பரவியதுண்டு. ஆனால் அதையெல்லாம் அவர் கண்டுகொள்வதில்லை. சுகன்யாவுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரீ என்ட்ரி: திருமண முறிவுக்கு பிறகும் பல படங்களில் நடித்துவந்தார். குணசித்திர வேடங்களில் நடித்த அவர் அதிலும் தனது முத்திரையை பதித்தார். அதேபோல் தொலைக்காட்சி சீரியல்கள், நிகழ்ச்சிகளிலும் தோன்றியிருக்கும் அவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டும்கூட. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நந்திதா தாஸ் ஏற்றிருந்த கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்ததும் சுகன்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக அவரது நடிப்பில் தீ இவன் என்ற படம் வெளியானது.
சுகன்யா பேட்டி: இந்நிலையில் சுகன்யா சினிமாவிலிருந்து ஒதுங்கியது ஏன் என்பது குறித்து சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சினிமாவிலிருந்து நானாக விலகவில்லை. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நான் நடித்த படங்களுக்கு விருதுகளும் கிடைத்தன. எனக்கு பெயரும் கிடைத்தன. ஆனால் அதை பற்றி யாருமே பேசவில்லை. படங்களில் தொடர்ந்து நான் நடிக்க தயாராக இருந்தேன். ஆனால் யாரும் என்னை அழைக்கவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











