கோலிவுட்டுக்கு வரும் நட்சத்திரா!

By Sudha

Nakshathra
முன்னாள் கதாநாயகி சுமித்ராவின் முதல் மகள் உமா பெரிய அளவுக்கு நடிகையாக பிரபலமாகாமல் போனாலும், நல்ல நடிகை என்ற பெயரை வாங்கினார். இப்போது அவரது தங்கை நட்சத்திராவும் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.

நடிகை சுமித்ராவின் மூத்த மகள் உமா. இளைய மகள் நட்சத்திரா. நட்சத்திரா இப்போது தமிழ் சினிமாவுக்கு வருகிறார்.

இவரது அக்காவான உமா, ஹோம்லியான நடிகை, நல்ல நடிகை என்ற பெயரை வாங்கினார். கவர்ச்சிக்கு ஒருபோதும் சம்மதிக்காமலேயே நடித்து முடித்தார் உமா. பின்னர் திருமணமாகி பெங்களூரில் செட்டிலானார். தற்போது மீண்டும் அவர் நடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், உமாவின் தங்கையான நட்சத்திரா நடிக்க வருகிறார். வருசநாடு என்ற படத்தில் நட்சத்திரா அறிமுகமாகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் குமரன். இவர்தைரியம் படத்தில் நடித்தவர். குமரனே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார்.

இதுபோக மருதவேலு என்ற படத்திலும் நட்சத்திரா நடிக்கவுள்ளார். இப்படத்தில் மலையாள நடிகர் கைலாஷ் நாயகனாக நடிக்கிறார். நட்சத்திரா இதில் 2வது நாயகியாக நடிக்கிறாராம்.

அக்காவைப் போல குடும்பப் பாங்கான ரோல்களில் மட்டுமே நடிக்க மாட்டேன். தேவைப்பட்டால், அதிக ஆபாசம் கலக்காத கவர்ச்சி ரோல்களிலும் நடிப்பேன் என்கிறார் நட்சத்திரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X