Summer Special: அண்டர்வாட்டர் தேவதை.. டாக்ஸிக் நடிகை கியாரா அத்வானி கணவருடன் ஃபயர் டான்ஸ்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி மற்றும் அவரது கணவரும் நடிகருமான சித்தார்த் மல்கோத்ரா இந்த சம்மரை செமையா கொண்டாடிய போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்துள்ளனர்.

தோனி பயோபிக் படத்தின் மூலம் பாலிவுட்டில் ரசிகர்களை கவர்ந்தவர் தான் கியாரா அத்வானி. ஆனால், அதைவிட நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் வைப்ரேட்டர் சீனில் நடித்து உலகளவில் புகழடைந்தார்.

Summer Special Kiara Advani and Siddharth Malhotra done fire dance and beach photos goes viral
Photo Credit:

இந்தியை தொடர்ந்து தெலுங்கில் மகேஷ் பாபு, ராம்சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தினார் கியாரா அத்வானி. ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படம் ஃப்ளாப் ஆன நிலையில், அடுத்ததாக யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்திற்காக காத்திருக்கிறார்.

நாட்டிலஸ் தீவில் கியாரா அத்வானி: மாலத்தீவு, பாலி தீவு எல்லாம் போர் அடித்துவிட்டது என புதிதாக இந்த சம்மருக்கு யுனைடட் ஸ்டேட்ஸில் உள்ள நாட்டிலஸ் தீவுக்கு தனது கணவர் சித்தார்த் மல்கோத்ராவுடன் சம்மர் வெயிலை சமாளிக்க சில பிகினி உடைகளை வாங்கிப் போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டார் கியாரா அத்வானி.

Summer Special Kiara Advani and Siddharth Malhotra done fire dance and beach photos goes viral
Photo Credit:

அண்டர்வாட்டர் தேவதை: ஆரஞ்சு பிகினியில் நீச்சல் குளத்தில் படுத்திருக்கும் போஸ் கொடுத்து எடுத்த போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை சில்லாக்கி உள்ளார் கியாரா அத்வானி. திருமணத்துக்குப் பிறகும் கணவருடன் சுற்றுலாவை என்ஜாய் பண்ணும் போதும் தனது 36 மில்லியன் ஃபாலோயர்களை மனதில் வைத்து தாராள கவர்ச்சி விருந்துக் கொடுத்துள்ளார்.

கடலில் ஸ்கூபா டைவிங்: நீச்சல் உடையில் ஏகப்பட்ட போஸ்களை கொடுத்த கியாரா அத்வானி ஆழ்கடலில் க்யூபா டைவிங் செய்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார். டாக்ஸிக் திரைப்படம் ஜூன் 4ம் தேதி வெளியாகும் என அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், மே மாதம் முழுவதும் புரமோஷன் தொல்லை இல்லாமல் ஜாலி டூர் கிளம்பி விட்டார்.

கணவருடன் நெருப்பு டான்ஸ்: ஸ்க்ரீனில் ஃபயர் வீடியோவை போட்டு கணவனும் மனைவியும் ஆடிய நடன வீடியோவையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை அள்ளியுள்ளனர். கியாரா அத்வானி தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக தனது போட்டோக்களை அதிகம் போட்டு சித்தார்த் மல்கோத்ராவுடன் இருக்கும் ஒரே ஒரு வீடியோ மட்டும் வெளியிட்டுள்ளார். இருவரது கால்களும் இருக்கும் ஒரு புகைப்படமும் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கியாரா அத்வானியின் சம்மர் டூர் செம காஸ்ட்லி என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X