Summer Special: பாத் டப்பில் குளிக்கும் சிருஷ்டி டாங்கே.. தர்மதுரை ஹீரோயினின் தாராளம்.. கூல் பிக்ஸ்!

சென்னை: காதலாகி எனும் படத்தின் மூலம் 2010ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை சிருஷ்டி டாங்கே. மேகா திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. டார்லிங், எனக்குள் ஒருவன், தர்மதுரை, சந்திரமுகி 2, கடைசியாக இந்த ஆண்டு ஸ்ரீகாந்த் உடன் இணைந்து தி பெட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

கன்னக்குழி அழகியான சிருஷ்டி டாங்கே சுமார் 16 வருடங்கள் தமிழ் சினிமாவில் தாக்குப் பிடித்து வருகிறார். குக் வித் கோமாளி சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றார். பிக் பாஸ் சீசன் 7ல் கெஸ்ட்டாக வந்துச் சென்றார். 8வது சீசனில் போட்டியாளராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிக் பாஸில் பங்கேற்கவில்லை.

Summer Special Shrusti Dange shares her bath tub glamour photos at the hillstation vacation
Photo Credit:

பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை என்றும் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை அடிக்கடி குஷிப்படுத்தும் விதமாக கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கி வருகிறார். சம்மரை கொண்டாடும் வகையில் தற்போது பாத் டப்பில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

கன்னக்குழி அழகி: சில நடிகைகளுக்கு மட்டுமே சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகு இருக்கும். அதில், ஸ்பெஷலானவர் சிருஷ்டி டாங்கே என்றே சொல்லலாம். முன்னணி நடிகர்கள் மற்றும் இளம் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புகள் இவருக்கு சரியாக அமையாத நிலையில், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

தர்மதுரை படத்தில் சூப்பர் ரோல்: மேகா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த தர்மதுரை படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் தோழியாக சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தியிருப்பார். சந்திரமுகி 2 படம் எல்லாம் ஹிட் ஆகியிருந்தால் இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கும் என்கின்றனர்.

பாத் டப்பில் சிருஷ்டி டாங்கே: கோடை விடுமுறையை ஒவ்வொரு நடிகைகளும், சினிமா பிரபலங்களும் வெளிநாடுகளுக்கும், தண்ணீர் இருக்கும் தீவுகளையும் தேடி ஓடி கொண்டாடி வருகின்றனர். வெயிலில் இருந்து எஸ்கேப் ஆக நல்லதொரு மலை பிரதேசத்துக்குச் சென்றுள்ள நடிகை சிருஷ்டி டாங்கே அங்கே பாத் டப்பில் நீச்சல் உடையில் குளிக்கும் போட்டோக்களையும் அந்த ரெசார்ட்டில் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X