சமந்தாவுக்கு குட்டைப் பாவாடை செட் ஆகலையே...
அஞ்சானில் ஏக் தோ தீன் பாடலுக்கு முழு நீள ஜீன்ஸ் போட்ட சூர்யாவும், ஒரு ஜான் டவுசர் போட்ட சமந்தாவும் குத்தாட்டம் போட்டுள்ளனர். ஆனால் லோ கிப் குட்டைப் பாவடையும், பட்டன் போடாத சட்டையும் போட்டு சமந்தா ஆடியது... கொஞ்சம் கூட பொருத்தமே இல்லை என்கின்றனர் சமந்தா ரசிகர்கள்.
தமிழ் சினிமாவில் இதுவரை சமந்தாவை கவர்ச்சியில் பார்த்திராத ரசிகர்களால் இந்த குத்தாட்டத்தை ரசிக்கமுடியவில்லை என்றே கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் சில நடிகைகளுக்குத்தான் எந்த உடை போட்டாலும் பொருத்தமாக இருக்கும். தமிழ் பெண்ணான சமந்தாவிற்கு புடவையும், சுடிதாரும்தான் சூப்பர் என்கின்றனர் ரசிகர்கள்.
தழைய தழைய கட்டும் புடவையோ, பாவடை தாவணியோ, சல்வார்கமீஸோ குட்டை கவுனோ எல்லோருக்கும் எல்லா உடைகளும் செட்ஆகாது.

சுடிதாரில் சூப்பர்
பாணா காத்தாடியில் தமிழச்சி சமந்தாவின் அழகை சுமாராகத்தான் காட்டியிருந்தார்கள். ஆனால் நான் ஈ படம்தான் சமந்தாவை அழகியாக பல ரசிகர்களுக்கு தெரியவைத்தது. அதில் டாப்ஸ், சுடிதார், புடவை என அசத்தியிருப்பார் சமந்தா.

வசந்தமாய் வீசிய சமந்தா
நீதானே என் பொன் வசந்தம் படத்தில் பள்ளி யூனிபார்ம், சுடிதார், புடவை என அசத்தலான உடைகள் அணிந்து நடித்தார் சமந்தா.

தெலுங்கில் கவர்ச்சி
தமிழ் படங்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்தாலும் தெலுங்கு படங்களில் சமந்தாவின் கவர்ச்சி அதிகமாகவே இருக்கும்.

அஞ்சானில் கவர்ச்சி
சருமநோய் பற்றிய வதந்தி, நீதானே என் பொன்வசந்தம் தோல்வி என பல சிக்கல்கள் சமந்தாவை கவர்ச்சிக்கு மாறவைத்துவிட்டதோ என்னவோ, அஞ்சான் படத்தில் கவர்ச்சியில் கலக்கியுள்ளார்.

ஒரு ஜான் உடைகள்
சூர்யா பாடியுள்ள ஏக், தோ, பாடலுக்கு சமந்தா போட்டிருக்கும் உடைகள் தமிழ் சினிமாவில் இதுவரை அவர் அணிந்தே நடித்திராத உடைகள். ஒருஜான் டவுசர் அல்லது மினி ஸ்கர்ட். ஆனால் சமந்தாவிற்கு அந்த உடைகள் பொருத்தமற்றவையாகத்தான் இருந்தது என்கின்றனர் பாடலைப் பார்த்தவர்கள்.

ப்ரேக் விடாமல் இருக்கவா?
குத்துப்பாடலுக்கு சூர்யா பாடியதை கேட்டு தியேட்டரில் இருந்து யாரும் எழுந்து வெளியே போகக்கூடாது என்று நடிகைக்கு இந்த கவர்ச்சி உடைகளை மாட்டி விட்டாரோ இயக்குநர் என்று நினைக்கத் தோன்றுகிறது.

கொஞ்சம் யோசிங்களேன்
சமந்தாவை பாந்தமாக சல்வார் கமீஸ், புடவையில் பார்த்தவர்களுக்கு இது கொஞ்சம் அதிர்ச்சியைக் கூட ஏற்படுத்தியிருக்கலாம். புடவையில் கூட கவர்ச்சியாக நடிக்கலாம்தான் ஆனால் கவர்ச்சியை திணிப்பதற்காக அணியும் உடைகள் அறுவெறுப்பை ஏற்படுத்திவிடும் என்கின்றனர் சமந்தாவின் ரசிகர்கள். சமந்தாவும் யோசிப்பாரா?


Click it and Unblock the Notifications











