கடற்கரை மணலே சூடாகிடும் போல.. விஜே அஞ்சனாவின் ஹாட் போட்டோஸ்!
சென்னை : சின்னத்திரையில் பிரபலமான வி.ஜே அஞ்சனா, கடற்கரையில் கதாநாயகிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் மார்டன் உடையில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை திணறடித்து வருகிறார்.
சன் மியூசிக்ஸ் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர் அஞ்சனா.
இவர் கயல் படத்தின் நாயகன் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உண்டு.

விஜே அஞ்சனா
1989ம் ஆண்டு பிறந்த விஜே அஞ்சனா, எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபாடு கொண்டவர். சன் மியூசிக்ஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அஞ்சனா. அதன் பின் லைவ் ஷோக்கள், சன்டிவியில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள், சினிமா இசை வெளியீட்டு விழா என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

காதல் திருமணம்
பின்னர் 2016ம் ஆண்டு கயல் பட கதாநாயகன் சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ருத்ராஷ் என்ற மகன் இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்தார். அதன் பிறகு, புதுயுகம் , ஜீ தமிழ், கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க தொடங்கினார்.

இணையத்தில் ஆக்டிவ்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜே அஞ்சனாவுக்கு சினிமா வாய்ப்புகள் வந்த போதும் நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என கூறி நடிக்க மறுத்துவிட்டார். 2008ம் ஆண்டு மிஸ் சின்னத்திரை என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருது தொலைக்காட்சிகளில் மிகவும் திறமையானவர்களுக்கு வழங்கப்படும் விருதாகும்.

கடற்கரையில் ஹாட் போஸ்
அஞ்சனா அவ்வபோது வொர்க்கவுட் வீடியோ, கணவன் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம், நடன வீடியோ போன்றவற்றை பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். தற்போது, இவர் கடற்கரை மணலில் மண்டியிட்டுக்கொண்டு, காற்றில் கூந்தலை பறக்கவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.4 மில்லியன் ஃபாலோயர்களை வைத்து இருக்கும் அஞ்சனாவுக்கு லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன. இந்த போட்டோவுக்கு கடலும் நானும் என கேப்ஷன் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











