விஜய்சேதுபதிக்கு ஜோடியான ஃபெமினா மிஸ் இந்தியா அழகி.. சூப்பர் அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் புதிய படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட்டை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் திருச்சிற்றம்பலம் மற்றும் விஜய்சேதுபதியின் 46வது படம் என சன் பிக்சர்ஸ் வரிசை கட்டி பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருகிறது.

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடிக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் தற்போது அறிவித்துள்ளது.

விரைவில் 50

விரைவில் 50

ஏற்கனவே விஜய்சேதுபதி நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், அவர் நடிப்பில் உருவாக உள்ள 46 படத்தை இயக்குநர் பொன்ராம் இயக்குகிறார். பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது. விரைவில் விஜய்சேதுபதி 50வது பட அறிவிப்பையும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்தியேனை விட்டு விலகி

சிவகார்த்தியேனை விட்டு விலகி

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என வெற்றிக் கூட்டணியாக திகழ்ந்த சிவகார்த்திகேயன் மற்றும் பொன்ராம் கூட்டணியில் வெளியான சீமராஜா படம் தோல்வியை சந்தித்த நிலையில், அந்த கூட்டணி முடிவுக்கு வந்தது. சசிகுமார் உடன் இணைந்து எம்ஜிஆர் மகன் படத்தை இயக்கி உள்ள பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதியின் 46வது படத்தை இயக்கி வருகிறார்.

சன் பிக்சர்ஸ் சாம்ராஜ்யம்

சன் பிக்சர்ஸ் சாம்ராஜ்யம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த, தளபதி விஜய்யின் பீஸ்ட், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், தனுஷின் திருச்சிற்றம்பலம் என ஏகப்பட்ட டாப் ஹீரோக்களின் படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் விஜய்சேதுபதியின் 46வது படத்தையும் தயாரித்து வருகிறது.

காமெடியனாக புகழ்

காமெடியனாக புகழ்

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான விஜய் டிவியின் புகழ் இந்த படத்தில் காமெடி நடிகராக நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் - சூரி காம்பினேஷனில் காமெடி படங்களை கொடுத்து வந்த இயக்குநர் பொன்ராமின் இந்த புதிய கூட்டணி ரசிகர்களை சிரிப்பு வெள்ளத்தில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி பொண்ணு

திருச்சி பொண்ணு

திருச்சியில் பிறந்து சென்னை லயோலா கல்லூரியில் படித்து மாடலிங் துறையில் கலக்கி வரும் அனு கீர்த்தி வாஸ் தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கி வரும் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனுகீர்த்தியின் பிறந்தநாள் அதுவுமாக சன் பிக்சர்ஸ் தற்போது அறிவித்துள்ளது.

ஃபெமினா மிஸ் இந்தியா

ஃபெமினா மிஸ் இந்தியா

கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஃபெமினா மிஸ் தமிழ்நாடு மற்றும் ஃபெமினா மிஸ் இந்தியா அழகி போட்டிகளில் கலந்து கொண்ட அனுகீர்த்தி வாஸ் இரு டைட்டில்களையும் தட்டிச் சென்றார். மாடலிங் துறையில் ஆர்வமாக இருந்த அவருக்கு தற்போது விஜய்சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அப்போ கீர்த்தி சுரேஷ் இப்போ அனுகீர்த்தி

அப்போ கீர்த்தி சுரேஷ் இப்போ அனுகீர்த்தி

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிய நிலையில், அழகிப் பட்டம் வென்றுள்ள அனுகீர்த்தி பொன்ராம் படத்தில் அறிமுகமாகவுள்ள நிலையில், அவரும் கோலிவுட்டில் கொடிகட்டி பறப்பார் என ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

கீர்த்தி ஷெட்டி வேண்டாம்

கீர்த்தி ஷெட்டி வேண்டாம்

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான உப்பென்னா படத்தில் நடித்த கீர்த்தி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற பேச்சு அடிபட்டதாகவும், ஆனால், விஜய்சேதுபதி மகளாக நடித்தவர் ஹீரோயினாக வேண்டாம் என மறுத்ததாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. இந்நிலையில், கீர்த்தி ஷெட்டிக்கு பதில் தான் அனுகீர்த்தியா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X