Alya Manasa: 1.8 கோடியில் வீடு கட்டிய ஆல்யா மானசா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருக்கின்றனர் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அண்மையில் இவர்கள் பிரம்மாண்டமான புதுவீடு கட்டி குடியேறினார்கள். இந்த வீட்டின் மதிப்பு மட்டும் 1.8 கோடியாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், தற்போது ஆலியா மானசாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி' தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஆல்யா மானசா. இந்த சீரியலில் வீட்டு வேலைக்காரி பெண்ணாக செண்பா என்ற ரோலில் நடித்து வந்த இவர், அந்த தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் சீரியலில் தொடர்ந்து நடித்து வந்த இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

alya manasa sanjiv salary

ஆலியா மானசா, சஞ்சீவ்: விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2ல் நடித்த இவர் இரண்டாவது குழந்தை பிறந்ததும் அந்த சீரியலை விட்டு விலகினார். தற்போது இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா' தொடரில் லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல, சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல்' தொடரில் நடிக்கிறார். அண்மையில் இவர் பிரம்மாண்டமான வீடு ஒன்றை கட்டியது சோஷியல் மீடியாவில் டிராண்டானது.

பிரம்மாண்ட வீடு: 1.5 bhk வீட்டில் ஆல்யா, சஞ்சீவ், அவரது தாய், தம்பி குழந்தைகள் அனைவரும் வசித்து வந்த நிலையில், ஆசை ஆசையாக கட்டிய வீட்டின் கிரஹபிரவேசத்திற்கு சின்னத்திரை நண்பர்கள் அனைவரையும் அழைத்து அமர்க்களப்படுத்தி விட்டார். கோயம்புத்தூரில் இருந்த சொந்த வீட்டை அப்பாவோட மருத்துவ செலவுக்காக வித்துட்டு, 4 லட்சத்தோடு சென்னை வந்து ரொம்ப கஷ்டப்பட்டோம். இப்போ எங்க புது வீட்டுக்கு என் அம்மா அப்பா பேரு வச்சுருக்கோம் என்று நெகிழ்ச்சியாக பேசி இருந்தார்.

ஆல்யா மானசாவின் சம்பளம்: இந்நிலையில், ஆல்யா மானசா அளித்துள்ள பேட்டியில், ஒரு சின்ன வீட்டில் நாங்கள் அனைவரும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டு இருந்தோம். இப்போது எங்கள் ஆசைப்படி வீடு வாங்கி இருக்கிறோம். இது எங்களின் கனவு வீடு, சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதை முழுக்க முழுக்க தான் லோனில் தான் கட்டியுள்ளதாகவும் மானசா பேசி இருந்தார். இதைத் தொடர்ந்து சம்பளம் குறித்து பேசிய மானசா, கடந்த 2022ம் ஆண்டு "இனியா" தொடரில் நான் நடிக்கும் போது எனது சம்பளம், ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 20,000 முதல் 25,000 வரை சம்பளமாக தரப்பட்டது. தற்பொழுது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் 50,000 முதல் 60,000 வரை அவர் சம்பளம் வாங்குவதாக அந்த பேட்டியில் மானசா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X