ஜாக்கெட் இல்லாமல்.. மலையில் மல்லாக்க படுத்த சுந்தரி சீரியல் நடிகை.. உச்சுகொட்டும் ஃபேன்ஸ்!

சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை கேப்ரியல்லா. இவருக்கு கடந்த ஆண்டு குழந்தை பிறந்த நிலையில் தற்போது மீண்டும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நடத்தி இருக்கும் போட்டோஷூட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விஜய் டிவியில் 2016ம் ஆண்டு ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தனி ஆளாக கலந்து கொண்டு தனக்கு என்று தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். தனது திறமையின் மீது நம்பிக்கை வைத்து, ஸ்டாண்ட் ஆப் காமெடி செய்து அசத்தினார். ஆரம்பத்தில் சொதப்பினாலும், அந்த நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்கு பிடித்து வந்தார். அதன் பின் தனது திறமையால், டிக் டாக்கில் அழகான கருத்துள்ள கவிதையை வீடியோவாக பதிவிட்டு பெயர் எடுத்தார். சின்னத்திரை, சோசியல் மீடியாவில் மட்டும் தலைகாட்டி வந்த கேப்ரியல்லா, நயன்தாரா நடித்த ஐரா படத்தில் நடித்திருந்தார். அதன் பின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்த கபாலி படத்திலும், காஞ்சனா 3 படத்திலும் சின்ன ரோலில் நடித்தார்.

Sundari serial gabriella sellus
Photo Credit:

சுந்தரி சீரியல்: சன் தொலைக்காட்சியில் சுந்தரி சீரியலில் லீட் ரோலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த சீரியல் 2023ம் ஆண்டு முடிவடைந்தது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தரி சீரியல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பானது. இதில், சுந்தரி தனது கனவை கடுமையாக போராடி அடைகிறாள். இந்த சீரியல் முடிந்த நிலையில், கேப்ரியல்லா கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்து இருந்தார்.

வித்தியாசமான போட்டோஸ்: இதைத் தொடர்ந்து, கேப்ரியல்லாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு சில மாதங்கள் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிடாமல் இருந்த கேப்ரில்லா, தற்போது அந்த காலத்து மலைவாழ் பெண் போல மேக்கப் போட்டு போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த போட்டோவில் ஜாக்கெட் இல்லாமல் மலைக்கு நடுவே படுத்தபடி, விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் கேப்ரில்லாவை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X