ஹேப்பி பர்த்டே சுனைனா.. காதலில் விழுந்தேன் டு சில்லுக்கருப்பட்டி.. சுனைனாவின் சினிமா ட்ரிப்!

சென்னை: நடிகை சுனைனாவின் 31வது பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் சுனைனா நடித்துள்ளார்.

காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சுனைனாவுக்கு சினிமாவில் நிறைய அப்ஸ் அண்ட் டவுன்ஸ் தருணங்கள் ஏற்பட்டுள்ளன.

செம ஜோடி

செம ஜோடி

2005ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் வெர்சஸ் குமாரி படத்தின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்த சுனைனா, தமிழில் கடந்த 2008ம் ஆண்டு சன் பிக்சர்ஸ் ரிலீஸ் செய்த காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார். காதலில் விழுந்தேன், மாசிலாமணி என தொடர்ந்து நகுல் படத்தில் நடித்தார் சுனைனா.

திறமையான நடிகை

திறமையான நடிகை

சுனைனா ஒரு சூப்பர் நடிகை என்று சொல்லும் அளவுக்கு சில தரமான நடிப்பை தமிழ் சினிமாவுக்கு வழங்கி உள்ளார் சுனைனா. 2010ம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக அறிமுகமான வம்சம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சுனைனா, கிராமத்து பெண்ணாக கச்சிதமாக நடித்து இருப்பார்.

தொடர் தோல்வி

தொடர் தோல்வி

காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வம்சம் என தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த நடிகை சுனைனாவுக்கு தொடர்ந்து சினிமா வாழ்க்கை மேடை ஏற்றும் ஏணியாக அமையாமல், பாம்புகள் நிறைந்த பரமபதமாக மாறியது. யாதுமாகி, திருத்தணி, சமர், வன்மம், நம்பியார் என தொடர்ந்து பல தோல்விகளையும் சுனைனா சந்தித்தார்.

மீண்டும் ஒரு வாய்ப்பு

மீண்டும் ஒரு வாய்ப்பு

இப்படி தொடர்ந்து படங்கள் தோல்வியை சந்தித்தாலும், இதன் இடையே வெளியான சீனு ராமசாமியின் நீர்ப்பறவை படம் நடிகை சுனைனாவை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு நியாபகப்படுத்தியது. விஷ்ணு விஷால் உடன் இணைந்து மீனவர்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக சுனைனா நடித்து செம ஸ்கோர் செய்திருந்தார்.

துணை நடிகை

துணை நடிகை

பல படங்கள் தோல்வியை சந்தித்ததால், ஹீரோயின் அந்தஸ்த்தை இழந்த நடிகை சுனைனா சில முன்னணி நடிகர்களின் படங்களில் சைடு ரோலிலும், துணை நடிகையாகவும் நடிக்கவும் மறுக்கவில்லை. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு பொண்ணு பார்க்கும் சின்ன ரோலில் நடித்து இருப்பார். தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்திலும் துணை நடிகையாக நடித்திருப்பார்.

சில்லுக்கருப்பட்டி

சில்லுக்கருப்பட்டி

அப்ஸ் அண்ட் டவுன்ஸ் நிறைந்த சினிமா வாழ்க்கையை கொண்ட நடிகை சுனைனாவுக்கு மீண்டும் ஒரு நல்ல வரவேற்பு கொடுத்த படமாக கடந்த ஆண்டு ஹலிஷா ஷமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி படம் அமைந்துள்ளது. சமுத்திரகனியுடன் ஹலோ அம்மு எனும் 4வது கதையில் சுனைனா தனது முழு நடிப்புத் திறமையை வெளிக்காட்டி பாராட்டுக்களை அள்ளி உள்ளார்.

அடுத்த ட்ரிப்

அடுத்த ட்ரிப்

சில்லுக்கருப்பட்டி படத்தைத் தொடர்ந்து காமெடி நடிகர்கள் யோகி பாபு மற்றும் கருணாகரன் உடன் இணைந்து சுனைனா ஹாரர் திரில்லர் படமான ட்ரிப் படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில், உலகின் மிக ஆபத்தான நாய் இனமான பிட் புல்லுடன் ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் சுனைனா நடித்துள்ள வீடியோவை பகிர்ந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

டிரெண்டிங்

சியான் விக்ரம் பிறந்த நாள், கில்லி ரிலீசாகி 16 வருஷம் என பல ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வரும் நிலையில், நடிகை சுனைனாவின் பிறந்த நாளையும் அவரது ரசிகர்கள் #HappyBirthdaySunainaa என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சுனைனாவுக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X