டீ குடிச்சது குத்தமாய்யா.. வசமா சிக்கிய சுனைனா.. வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்.. அதுதான் காரணமா?
சென்னை: நடிகை சுனைனா டீ குடிக்கும் வீடியோவை வெளியிட்ட நிலையில், அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்ற ஆரம்பித்து விட்டனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஜோதா அக்பர் படத்தில் இடம்பெற்ற முழுமதி அவளது முகமாகும் பாடலுடன் அந்த வீடியோவை சுனைனா வெளியிட்டு இருந்தார்.
ஆனால், பிரச்சனை அந்த பாடல் இல்லை, சுனைனா குடித்த டீயும் அல்ல. அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிந்த பேக்கிரவுண்ட் தான் நடிகை சுனைனாவை நெட்டிசன்கள் திட்டித் தீர்க்க காரணமாக அமைந்துள்ளது.

அப்படி சுனைனா வெளியிட்ட டீ குடிக்கும் வீடியோவில் என்ன தான் பாஸ் பிரச்சனை என்று கேட்கும் ரசிகர்களுக்கு நெட்டிசன்கள் போட்டுள்ள கமெண்ட்டுகளை வைத்தே விளக்கி விடுகிறோம்.
டீ சூப்பரா இருந்தா: நடிகை சுனைனா டீ சூப்பரா இருந்தா இப்படியொரு வீடியோ போடலாம் என வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் வீடியோ சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் திட்டித் தீர்க்கும் அளவுக்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதற்கு காரணம் அந்த வீடியோவில் சுனைனா இருக்கும் இடத்துக்குப் பின்னால் இருக்கும் ஜன்னலில் தெரிந்த அந்த அரபு வார்த்தைகள் தான்.
துபாயில் சுனைனா: காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சுனைனா சில்லுக்கருப்பட்டி, தெறி, என்னை நோக்கிப் பாயும் தோட்டா, வம்சம், நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சுனைனா நடிப்பில் வெளியான ட்ரிப், லத்தி மற்றும் ரெஜினா உள்ளிட்ட படங்கள் படுதோல்வியை சந்தித்தன. சினிமாவில் மார்க்கெட் டவுன் ஆன நிலையில், துபாய் யூடியூபரை சுனைனா காதலித்து வருவதாகவும் அவருடன் ரகசியமாக நிச்சயம் செய்துக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், துபாயில் அந்த யூடியூபருடன் தான் சுனைனா டீ குடித்து வருகிறாரா? என்கிற கேள்வியை எழுப்பி நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
விவாகரத்துக்கு காரணம்: பிரபல யூடியூபரான காலித் அல் அமெரி தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு சுனைனாவை காதலித்து வருகிறார் என்றும் அவருடன் நிச்சயம் ஆகி விட்டதாகவும் நெட்டிசன்கள் நோண்டி நொங்கெடுத்து நாக சைதன்யா - சோபிதா துலிபாலா விவகாரத்தை கண்டறிந்ததை போலவே இந்த விவகாரத்திலும் சிஐடி வேலைகளை பார்த்து வருகின்றனர். ஆனால், சுனைனா நிச்சயம் ஆனதை மட்டுமே தெரிவித்த நிலையில், யாருடன் நிச்சயம் ஆனது என்பதை இன்னமும் அறிவிக்கவில்லை.
ரசிகர்கள் ஏன் திட்றாங்க: அதே போல காலித்தும் தனக்கு இன்னொரு பெண்ணுடன் நிச்சயம் ஆனது என்பதை அறிவித்த நிலையில், அவரும் தனது வருங்கால மனைவியை அறிமுகம் செய்யவில்லை. காலித் மற்றும் அவரது மனைவி சலாமாவின் ரசிகர்கள் தான் சுனைனாவின் போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை பதிவிட்டு அவரை விளாசி வருகின்றனர்.
நல்லா டீ குடிங்க: ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே நாசமாக்கி விட்டு நீ நல்லா டீ குடி என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளால் நடிகை சுனைனாவை படுமோசமாக திட்டித் தீர்த்து வருகின்றனர். சினிமா வாய்ப்புகள் புதிதாக கிடைக்காத நிலையில், இந்த ஆண்டு இன்ஸ்பெக்டர் ரிஷி வெப்சீரிஸில் சுனைனா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அவருடைய அடுத்த படங்கள் மற்றும் வெப்சீரிஸ் குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் வயநாட்டுக்கு காலித் வந்திருந்ததும் சர்ச்சையை கிளப்பியது. வயநாட்டில் நிலச்சரிவு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், காலித்துடன் சுனைனா துபாய்க்கு சென்று விட்டாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











