லிவ்வின் ரிலேஷன்ஷிப் குறித்து சுனைனா சொன்ன பதில்.. நிறைய கடன் பிரச்சனையில சிக்கிட்டாராம்!
சென்னை: நடிகை சுனைனா நடிப்பில் இந்த வாரம் ராக்கெட் டிரைவர் படம் தியேட்டர்களில் வெளியாகிறது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் விஞ்ஞானியான ஏபிஜே அப்துல் கலாம் டைம் டிராவல் செய்து வந்தால் எப்படி இருக்கும் என்பது போல இந்த படத்தை ஸ்ரீராம் ஆனந்தசங்கர் என்பவர் இயக்கியுள்ளார்.
விஸ்வத் மற்றும் சுனைனா நடித்துள்ள இந்த படம் இந்த வாரம் விமல் நடித்துள்ள சார் உள்ளிட்ட படங்களுடன் போட்டியாக வெளியாகிறது. இதில், சுனைனா டிராபிக் போலீஸாக நடித்துள்ளார்.

இளம் மாணவனாக இருக்கும் நபரை இவர் தான் அப்துல் கலாம் எனக் கூற அவரை விசாரிக்கும் காட்சிகளில் சுனைனா ஸ்கோர் செய்துள்ளார். அந்த படத்தின் புரமோஷன் குறித்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வரும் சுனைனா தனது காதல் மற்றும் திருமணம் குறித்த கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார்.
நடிகை சுனைனா: ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரேயா, விவேக் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக காத்திருந்தார் சுனைனா. ஆனால், அவர் நடித்த காட்சி எடிட்டிங்கில் போய் விட்ட நிலையில், நகுல் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மாசிலாமணி, நீர் பறவை, தெறி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லுக்கருப்பட்டி, ட்ரிப், ரெஜினா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுனைனா நடிப்பில் இந்த வாரம் ராக்கெட் டிரைவர் படம் வெளியாகிறது.
சுனைனா பற்றிய கிசுகிசு: சுனைனா நடித்த இன்ஸ்பெக்டர் ரிஷி எனும் ஹாரர் வெப்சீரிஸ் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. திடீரென நடிகை சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நிச்சயம் ஆனது போல மோதிர விரலை காட்டியிருந்தார். துபாயை சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி என்பவரை தான் சுனைனா காதலிப்பதாக ஏகப்பட்ட கிசுகிசுக்கள் பரவின. அதனை இதுவரை மறுக்காத சுனைனா அதை உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
லிவிங் டுகெதர் வாழ்க்கை: நடிகை சுனைனாவிடம் அவர் நடித்துள்ள ராக்கெட் டிரைவர் படத்தை பற்றிய கேள்விகளை தொகுப்பாளினி எழுப்ப அதற்கெல்லாம் சூப்பராக பதில் அளித்த சுனைனா லிவிங் டுகெதர் வாழ்க்கை பற்றிய கேள்விக்கு What? என டென்ஷனாக தொகுப்பாளினி அப்படியே டாப்பிக்கை மாற்றி திருமணம் எப்போது எனக் கேட்டார். அதற்கும் சுனைனா இப்போதைக்கு இல்லை என்பது பதில் அளித்து மழுப்பி விட்டார்.
பொருளாதார சிக்கல்: சினிமாவில் ஹீரோயினாக நடித்து வந்த சுனைனா சமீப காலமாக பெரிய பட வாய்ப்புகள் கிடைக்காமல் கிடைக்கும் சிறு சிறு படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து வருகிறார். தனக்கு இடையே பெரியளவில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டது என்றும் ஏகப்பட்ட பிரச்சனைகளை வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். துரோகங்கள் நிறைய இருக்கு, இது எனக்கு மட்டும் தான் இருக்கு என சொல்ல மாட்டேன். பலரும் இந்த பிரச்சனைகளை கடந்து தான் வாழ்ந்து வருகின்றனர். நானும் அதில் ஒருத்தி எனக் கூறியுள்ளார்.
சினிமாவை காதலிக்கிறேன்: உங்களுடைய லவ்வர் பற்றியும் காதல் வாழ்க்கை பற்றியும் ஏதாவது சொல்றீங்களா என்கிற கேள்விக்கும் உஷாராக சினிமாவை மட்டுமே காதலிக்கிறேன் என்றும் ஓய்வு நேரங்களில் அதிகம் சினிமா மற்றும் வெப்சீரிஸ் பார்க்கிறேன். அதை பொழுதுபோக்குக்காக பார்க்காமல் ஹோம் வொர்க் செய்வது போல பார்ப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications











