இருட்டில் முண்டா பனியனுடன் ஒரு செல்ஃபி.. லைட்டை போடுங்க சுனைனா!

சென்னை : நடிகை சுனைனா இப்பொழுது யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து ட்ரிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

2019ஆம் ஆண்டு வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படத்தில் நடித்திருந்த சுனைனாவுக்கு எக்கச்சக்கமான பாராட்டுக்கள் குவிந்தது.

இந்நிலையில் இருட்டில் வெறும் முண்டா பனியனுடன் இருக்கும் எடுத்து செல்ஃபி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்படுகிறது.

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

வித்தியாசமான கதாபாத்திரத்தில்

சினிமாவில் நம்பிக்கைக்குரிய இளம் நடிகையாக இருக்கும் நடிகை சுனைனா தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார். காதலில் விழுந்தேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டவர். முதல் திரைப்படத்திலேயே பலரும் தயங்கும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

காதலில் விழுந்தேன் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற நிலையில் அதைத் தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை என தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து விருதுகளையும் பாராட்டுகளையும் தொடர்ந்து வென்று வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான தெறி, சமர், காளி, எனை நோக்கி பாயும் தோட்டா போன்ற திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிப்பு கவனிக்கப்பட்டு

நடிப்பு கவனிக்கப்பட்டு

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கத்தில் வெளியான சில்லுக்கருப்பட்டி ஆந்தாலஜி திரைப்படத்தில் சமுத்திரகனிக்கு ஜோடியாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்க இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு சுனைனாவின் நடிப்பும் கவனிக்கப்பட்டு பாராட்டுக்களைப் பெற்றது.

லைட்டை போடுங்க

லைட்டை போடுங்க

இந்நிலையில் அறிமுக இயக்குனர் டென்னிஸ் இயக்கி வரும் ட்ரிப் திரைப்படத்தில் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்க விருவிருப்பான த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இதன் ட்ரெய்லர் இப்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி வெளியாக உள்ளது. கவர்ச்சி இல்லாத கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற சுனைனா இப்பொழுது இருட்டு அறையில் வெறும் முண்டா பனியனுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ப்ளாக் அண்ட் வைட் கண்ணு உன்ன பாத்தா கலரா மாறுதே என வர்ணித்த வர சிலர் இருட்டா இருக்கு லைட்டை போடுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X