யம்மாடியோவ்.. சுனைனான்னா சும்மா இல்லை.. ஐஸ் கட்டி தொட்டியில் அப்படியொரு குளியல்!

சென்னை: நடிகைகள் திடீரென ஏதாவது ஒரு சவாலை செய்து ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்ப்பார்கள். தற்போது அப்படியொரு வேலையைத்தான் நடிகை சுனைனா செய்திருக்கிறார். ஐஸ் கட்டிகள் கொட்டப்பட்ட தொட்டிக்குள் அப்படியே இறங்கி அவர் குளிக்கும் காட்சி பார்ப்பவர்களையே உறைய வைக்கிறது.

பாய்ஸ் படத்தில் நடித்த நகுல் ஹீரோவாக உடம்பை எல்லாம் ஸ்லிம்மாக்கிய பின்னர் நடித்த காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை சுனைனா. அதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி படத்தில் இவர் நடித்திருந்தாலும், இவரது போர்ஷன் டெலிட் செய்யப்பட்டது.

Sunaina took ice bath challenge video and photos stuns fans

கிடைக்கும் பட வாய்ப்புகளை பிடித்துக் கொண்டு வெற்றி, தோல்விகளை தாண்டி நடித்து வரும் சுனைனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

காதலில் விழுந்தேன் முதல் ரெஜினா வரை: கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் vs குமாரி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தமிழில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்ப்பறவை, சமர், வன்மம், தெறி, நம்பியார், கவலை வேண்டாம், தொண்டன், காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா, சில்லு கருப்பட்டி, ட்ரிப், எஸ்டேட், லத்தீன் மற்றும் ரெஜினா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

பல படங்கள் தோல்வி: சுனைனா நடிப்பில் வெளியான ஒரு சில படங்களைத் தவிர பல படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. முன்னணி நடிகையாக வளர முடியாமல் பல ஆண்டுகளாக தெலுங்கில் மட்டும் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் அவர் நடித்த ட்ரிப், லத்தி மற்றும் ரெஜினா உள்ளிட்ட படங்கள் படு தோல்வியை சந்தித்தன. ரெஜினா படத்தின் தோல்விக்கு பிறகு அவருக்கு புதிதாக எந்த ஒரு படமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ் பாத் சேலஞ்ச்: சில நடிகைகள் மட்டுமே கஷ்டமான சவால்களை எதிர் கொள்வார்கள். ரகுல் பிரீத் சிங் முன்னதாக பனிப்பிரதேசத்தில் உள்ள ஐஸ் நதியில் டூ பீஸ் உடையில் இறங்கி குளிக்கும் வீடியோ ரசிகர்களை மிரட்டி விட்டது. சமீபத்தில் நடிகை ஜோதிகாவும் நீச்சல் உடையில் வெளிநாட்டில் ஐஸ் பாத் சேலஞ்ச் எடுத்திருந்தார். இந்நிலையில், குட்டி பாத் டப்பில் ஐஸ் கட்டிகளை நிரப்பி நடிகை சுனைனா எடுத்துக்கொண்ட ஐஸ் பாத் சேலஞ்ச் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். ஐஸ் மேன் இந்தியா எனும் சவாலை பிரபலங்களை வைத்து நடத்தி வரும் அஸ்கர் சுல்தான் கற்றுக் கொடுக்க தான் இதை சாதித்துக் காட்டியதாக சுனைனா பதிவிட்டுள்ளார்.

சும்மா ஜில்லுன்னு இருக்கு: சுனைனா ஐஸ் பாத் சேலஞ்ச் எடுத்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களுக்கு மார்ச் மாதமே வெயில் ஆரம்பித்து விட்ட நிலையில், இப்படித்தான் இனிமேல் குளிக்கணும் என்றும் சும்மா ஜில்லென இருக்கு என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஃபுல் டிரெஸ் போட்டா எப்படி?: சுனைனா நம்மை எல்லாம் ஏமாற்றி விட்டார் என்றும் ரகுல் ப்ரீத் சிங் மாதிரி நீச்சல் உடையில் ஐஸ் கட்டியில் இறங்கி குளிக்காமல் இப்படி ஃபுல் டிரெஸ் போட்டுக் கொண்டு குளித்தால் இதை எல்லாம் ஆட்டத்தில் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X