சுனைனா.. சுனைனா

By Staff

பாய்ஸ் படத்தில் ஸ்பைக்கி ஹேருடன் குண்டு குண்டு என்று ஒரு பையனும் நடித்தாரே ஞாபகம் இருக்கா?.

நகுல் என்ற அந்த பாய் இப்போது ட்ரிம் ஆகி கும் ஆகிவிட்டார். அப்படியே சோலோஹீரோவாகவும்அவதாரம் எடுத்துவிட்டார். இவர் தேவயானியின் தம்பி என்பது அடிசனல் செய்தி.

காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நகுல் தான் ஹீரோ. அவருக்கு ஹீரோயினாக நடிப்பது தெலுங்கில் சூட்டைகிளப்பி வரும் சுனைனா என்ற இருட்டுக்கடை அல்வா.

அக்கா மூலமாக சினிமாவில் சான்ஸ் தேடிக் கொண்டிருந்த நகுலுக்கு ஷங்கர் வாய்ப்புத் தந்தார். ஹரிணியைவிரட்டும் 5 பாஸ்களில் ஒருவராக நடித்த நகுல் ஓவர் குண்டு. இதனால் படம் தோல்வி அடைந்தது மாதிரியேநகுலும் காலியானார். இதைத் தொடர்ந்து பாடகராக மாறினார் நகுல். (அந்நியனில் பாடியிருக்கிறார்)

அதில் நடித்த சித்தார்த் மெதுவாக ஆந்திரா பக்கம் ஒதுங்கி கரையேற பாடுபட்டு வருகிறது. பரத்துக்கு காதல் கைகொடுத்துவிட்டது. மணிகண்டனுக்கு சில கில்மா ரக படங்கள் தான் கிடைத்து வருகின்றன.

மிச்சப் பசங்களில் இன்னொரு குண்டு தம்பி ஆளைக் காணவில்லை. இந் நிலையில் நகுலுக்கு யோகம்அடித்துவிட்டது. பாய்ஸ் படத்தில் பார்த்த நகுலா இது என்று ஆச்சரியப்படும் வகையில் உடம்பைக் கரைத்துஹாண்ட்சம் ஆக இருக்கிறார். 20 கிலோவை காலி செய்துள்ளாராம்.

சுனைனா-நகுலை வைத்து காதலில் விழுந்தேன் படத்தை இயக்கப் போவது புதுமுக இயக்குனர் பிரசாத். விஜய்ஆண்டனியின் இசையில் விஜய் மில்டனின் கேமராவை இயக்க இந்தப் படத்தை தயாரிக்கிறது அட்லாண்டிக்சினிமா என்ற நிறுவனம்.

இது ஒரு ரொமான்டிக் எண்டர்டெய்னர் என்கிறார் பிரசாத்.

இதில் நடிக்கும் சுனைனா தெலுங்கு சினிமாவை நன்றாக புரிந்து வைத்திருப்பவர். சம்திங் சம்திங் என்ற படத்தில்மோனா சோப்ரா, அஸ்வின் ஆகிய செஸ்க் பாம்களுக்கு இடையே அடக்க ஒடுக்கமாய் வந்து போனார்.

அடுத்த படத்திலேயே ஆடையை முடிந்த அளவு துறந்தார். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களை சிறப்புகவனிப்புகள் மூலம் மடக்கி பல வாய்ப்புக்களைப் பிடித்துப் போட்டுக் கொண்டு பரபரப்பாக இருக்கிறார்.

இப்போது தமிழுக்குள் வந்துள்ள சுனைனா இங்கும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் தீவிரத்தில் இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X