‘அனுஷா’வும் ராசியில்லை... மீண்டும் பழைய பேருக்கே மாறிய சுனைனா
சென்னை: பெயர் மாறினால் சினிமாவில் தன் நிலை மேலும் உயரும் என்ற தனது நம்பிக்கை பொய்த்துப் போனதால் மீண்டும் தனது பழைய பெயரிலேயே வலம் வருகிறார் சுனைனா.
காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சுனைனா. தொடர்ந்து மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை முதலிய படங்களில் நடித்திருந்தார். ஆனால், தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால், நியூமராலஜிப் படி தன் பெயரை அனுஷா என்று மாற்றிக் கொண்டார் சுனைனா.
ஆனால், தற்போது அப்பெயரும் ராசியில்லை என தனது பழைய பேருக்கே திரும்பியிருக்கிறாராம் சுனைனா.

சுனைனா (எ) அனுஷா...
நியூமராலஜி படி தனது பெயரை மாற்றிக் கொள்வது சினிமாவில் சகஜம் தான். அதன்படி, சுனைனா தன் பெயரை ஜோதிடர்கள் அறிவுரைப்படி அனுஷா என மாற்றினார். அதன்படி தனது புதிய படங்களின் டைட்டிலில் அனுஷா என்றே போடுமாறு பட நிறுவனங்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

பொய்த்துப் போன நம்பிக்கை...
"இந்தப் புதிய பெயர் என் பெற்றோர்களின் தேர்வு. இனி அதிகாரப்பூர்வமாக என் பெயர் அனுஷாதான். புதிய நம்பிக்கை மற்றும் நல்ல வாய்ப்புகளை இந்த பெயர் மாற்றம் தரும் என நம்புகிறேன்," என அப்போது தெரிவித்திருந்தார் சுனைனா என்ற அனுஷா.

ஏமாற்றிய அனுஷா....
புதிய பெயர் வைத்த நேரம் பட வாய்ப்புகள் வந்து குவியும் எனக் காத்திருந்த சுனைனாவுக்கு ஏமாற்றம் மட்டும் தான் கிடைத்தது. அதனால் மீண்டும் தனது பெயரை சுனைனா என மாற்றிக் கொள்ள முடிவு செய்து விட்டாராம்.

கூடுதலாக ஒரு எழுத்து...
அதன்படி, தனது பெயரில் ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும் ஒரு ‘எ' என்ற எழுத்தைக் கூடுதலாகச் சேர்த்துள்ளாராம் சுனைனா.


Click it and Unblock the Notifications











