»   »  1 கேடி 3 லேடி!

1 கேடி 3 லேடி!

Subscribe to Oneindia Tamil

ஜெய் ஆகாஷ் படு வேகமாக மீண்டும் கோலிவுட்டில் பட்டையக் கிளப்ப வந்துள்ளார்.மதன் என்ற படத்தை இயக்கி, ஹீரோவாக நடிக்கும் ஜெய் ஆகாஷுக்கு இதில் 3ஜோடிகள்.

முத்தான மூன்று ஜோடிகளில் ஒருவர் தமன்னா. தெலுங்கில் இந்த தமன்னா தான்சூப்பர் லீடிங்கில் இருக்கும் நாயகி. படு கிராக்கியான இந்த நாயகியை தனது படத்தில்போட இளைய தளபதி விஜய்யே கடுமையாக முயன்றார். ஆனால் முடியவில்லை.

அப்படிப்பட்ட தமன்னாவையே ஜெய் ஆகாஷ் தனது மதன் படத்தில்ஹீரோயினாக்கியிருப்பதால், படம் குறித்த எதிர்பார்ப்பு பெரிதாகியுள்ளது. இவர் ரவிகிருஷ்ணாவுடன் கேடி என்ற தமிழ்ப் படம் மூலம் தமிழுக்கு வந்தவர். இப்போதுஎஸ்.ஜே.சூர்யாவோடு அடுத்த படத்தில் நடித்து வருகிறார். தமன்னாவோடுநிற்கவில்லை ஜெய் ஆகாஷ்.

கூடவே சுனைனா, ரேகா என மேலும் இரு கும் பிகர்களையும் பிடித்துப்போட்டுள்ளார். சுனைனாவுக்கு சுண்டினாலே ரத்தம் கொப்பளிக்கும் போல அப்படிஒரு கலரோ கலர். படு க்யூட்டாகவும், பிரைட்டாகவும் இருக்கும் சுனைனாவைகவர்ச்சி கெளுத்தி மீனாக படத்தில் பயன்படுத்தி வருகிறார்கள்.


இவர் தேவயானியின் தம்பி நகுலுடன் காதலில் விழுந்தேன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது இரண்டாவதுதமிழ் படம். ஏற்கனவே தெலுங்கில் ஏகத்துக்கும் கிளாமர் காட்டி வருபவர் தான் இந்த சுனைனா.

ரேகாவை மட்டும் சும்மா விட்டுட முடியுமா. அவரை விலாங்கு மீன் ரேஞ்சுக்கு நீஞ்சிவிளையாட விட்டுள்ளனராம். தமன்னாவையும் தம் கட்டி கும் காட்டவைத்துள்ளனராம்.


படத்தின் பெயரிலேயே மதன் என்று இருப்பதால் படம் முழுக்க மன்மதவிளையாட்டுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால் படத்தின் கதை படு வித்தியாசமாகஇருக்கும் என்று ஜெய் ஆகாஷ் கூறுகிறார்.

மதன் நல்லவன் தான். ஆனால் வெளிப் பார்வைக்கு கேடியாகவும், கெட்டவனாகவும்தெரிவான். அவன் நல்லவன் என்பது அவனது காதலிக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.படம் படு வித்தியாசமாக இருக்கும் என்கிறார் ஜெய் ஆகாஷ். இப்போ பெயரை ஜெ.ஆகாஷ் என்று சுருக்கி விட்டாராம்.

தமன்னா, சுனைனா, ரேகா என மூன்று டோல்டப்பி லேடிகளுடன் லூட்டி அடிக்கும்கேடியாக ஆகாஷ் நடிக்கும் இந்த மதன், மக்களைை மயக்குவானா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil