ஜெயலலிதாவும், நானும் சொன்ன அந்த வார்த்தை.. கதறி அழுத குஷ்பூ.. சுந்தர்.சி சொன்ன சீக்ரெட்
சென்னை: தமிழில் டாப் நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ. ரஜினி, கமல் என இரண்டு துருவங்களுடனும், பல முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்தவர். குஷ்பூவின் மேல் அபரிமிதமான பாசத்தால் அவருக்கு தமிழ்நாட்டில் கோயில் கட்டிய காட்சிகள் எல்லாம் அரங்கேறின. மேலும் குஷ்பூ இட்லி என்பதும் தமிழ்நாட்டில் ஃபேமஸ் ஆனது. அந்த அளவுக்கு குஷ்பூ 80ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக திகழ்ந்தார். இந்தச் சூழலில் குஷ்பூ குறித்து சுந்தர்.சி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பூ. ஆனால் தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்ட அவர் தான் அறிமுகமான சில படங்களிலேயே சொந்த குரலில் டப்பிங் பேசினார். அழகு, நடிப்பு, நடனம் என அத்தனையும் வாய்க்கப்பெற்ற அவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

ஒரே வருடத்தில் 10 படங்கள்: 90களில் குஷ்பூ மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டு மட்டும் அவர், "மன்னன், ரிக்ஷா மாமா, பாண்டித்துரை, சிங்காரவேலன், சேவகன், இது நம்ம பூமி, அண்ணாமலை, அம்மா வந்தாச்சு, நாளைய செய்தி, பாண்டியன் என மொத்தம் 10 தமிழ் படங்களில் நடித்தார். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. பீக்கில் இருக்கும்போதே இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் குஷ்பூ.
அரசியலில் குஷ்பூ: பெரிய திரையில் கலக்கிவந்த குஷ்பூ சின்னத்திரையில் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க இப்போது பாஜகவில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவருகிறார்.
மீண்டும் நடிப்பில் குஷ்பூ: சில காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்த அவர் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் தற்போது ராமபானம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். அதில் கோபிசந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார் குஷ்பூ. ஆனால் அவர் நடித்த காட்சிகள் சில காரணங்களால் படத்திலிருந்து தூக்கப்பட்டன.
சர்ச்சை: இதற்கிடையே கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்பு குஷ்பூ பேசியதாக ஒரு பேச்சு ஒன்று பெரும் சர்ச்சையானது. அதாவது தமிழ்நாட்டு பெண்கள் குறித்து அவர் இழிவாக பேசியதாக சர்ச்சை உருவானது. அதற்கு குஷ்பூ மன்னிப்பும் கேட்டார். சூழல் இப்படி இருக்க அந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பாக சுந்தர்.சி பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
சுந்தர்.சி பேட்டி: அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தமிழ்நாட்டு பெண்களுக்கு கற்பு என்பது இல்லை என்று கூறியதாக 2004ஆம் ஆண்டு மாலை பத்திரிகை ஒன்றில் செய்தியாக போட்டனர். சொல்லாத ஒன்றினை பார்த்து மறுநாள் காலை பத்திரிகை அதனை வேறு விதமாக போட்டார்கள். தொடர்ந்து அந்த விஷயத்தை மற்ற தமிழ் பத்திரிகைகளும் போட ஆரம்பித்தன. அது பெரிய பிரச்னையானது. அப்போது ஒரு கணவனாக எனது மனைவிக்கு நான் சப்போர்ட் செய்தேன்.
ஜெயலலிதா உதவினார்: அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அவர்தான் உதவினார். இதை அரசியல் ஆக்குகிறார்கள் நீங்கள் ஒரு மன்னிப்பு கேட்பது போன்று ஒரு பேட்டி கொடுத்துவிடுங்கள் என்று ஜெயலலிதா சொன்னார். நானும் குஷ்பூவிடம், 'நான் சொன்னது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என்று விளக்கம் கொடுத்துவிடு' என்று கூறினேன். அதற்கு அவரோ அப்படி அழுதார். நான் பண்ணாத தவறுக்கு எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அழுதபடி என்னிடம் கேட்டார். அன்று அவரிடம் நான் விளக்கம் கொடுத்துவிடு என்று சொன்னதற்கு இன்றுவரை வருத்தப்படுகிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











