Mookuthi Amman 2: நயன்தாரா பத்தி என்ன சொல்லணும்.. அந்த கிசுகிசு.. சுந்தர் சி ஓபன் டாக்
சென்னை: மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தளத்தில் நடிகை நயன்தாரா நடந்துகொண்ட விதம் சுந்தர் சியை மிகவும் கோபப்படுத்தியதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. பின்னர் இதற்கு நடிகை குஷ்புவும் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் படம் தொடங்குவதற்கு முன்பே பலரது கண்கள் பட்டிருப்பதால் திருஷ்டி பட்டிருப்பதாகவும் குஷ்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், நயன்தாரா குறித்த கேள்விக்கு இயக்குநர் அளித்திருக்கும் பதில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இயக்குநர் சுந்தர் சி இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் கேங்கர்ஸ். இப்படத்தில் வடிவேலு, கேத்ரின் தெரசா, வாணி போஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு சுந்தர் சி - வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், இப்படம் வெளியாவதற்கு முன்பு நடிகர் வடிவேலுவும் சுந்தர் சியும் பட புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இதில், பல யூடியூப் சேனல்களுக்கும் தனிப்பட்ட முறையில் இருவரும் மாறி மாறி பேட்டி அளித்து வரும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மூக்குத்தி அமமன் 2 படப்பிடிப்பு குறித்து சுந்தர் சியிடம் தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு சுந்தர் சி பதில் அளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர் சி பதில்: மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தொடங்கும் முன்பு ஏற்பட்ட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவே சுந்தர் சியும் பதில் அளித்துள்ளார். மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பில் எனக்கும் நயன்தாராவிற்கும் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், இந்த செய்தி எப்படி பரவியது என்பது தான் எனக்கும் புரியவில்லை.பார்க்க கொஞ்சம் காமெடியாக இருந்தது. அட பாவிங்களா அமைதியாக இருந்தால் எதை வேண்டும் என்றாலும் சொல்வார்கள் போல என்றுதான் நினைத்தேன். நயன்தாரா ரொம்ப ஆர்வமா எதையும் கத்துக்கணும் விருப்பம் உள்ளவர். இந்த படத்தில் அவங்க பயங்கர Dedicate நடிச்சிட்டு இருக்காங்க. அவங்களுக்கான சீன் முடிந்தால் கூட லொகேஷனில் அடுத்தவர்கள் நடிப்பதையும் பார்த்து பாராட்டுகிறார். படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் கேரவனுக்கே செல்கிறார். இதுபோன்று வெளியாகு கிசுகிசுக்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என சுந்தர் சி தீர்க்கமாக தெரிவித்துள்ளார். இதுவரை அணையாமல் எரிந்து கொண்டிருந்த கேள்விக்கு தண்ணீர் ஊற்றி அணைத்து விட்டார் சுந்தர் சி.

பிரச்னையும் சர்ச்சையும்: மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தொடங்கிய நாளில் இருந்தே நயன்தாரா சர்ச்சைகளில் சிக்கி வந்தார். படத்தின் பூஜை நாளில் நடிகை ரெஜினா கஸண்ட்ரா எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டார். இதை பார்த்த நயன்தாரா அவரிடம் தனிப்பட்ட முறையில் அழைத்து கடிந்துகொண்டதாகவும் செய்திகள் பரவின. பின்னர், நடிகை மீனாவை கண்டுகொள்ளாமல் செல்வது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களும் வெளியாகின. அதைத்தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு தளத்தில் சுந்தர் சியின் உதவி இயக்குநரை நயன்தாரா திட்டியதால் நடிகையை மாற்ற இருப்பதாகவம் கிசுகிசுக்கப்பட்டது. பிறகு கால்ஷீட் பிரச்னை என அடுக்கடுக்கான புகார்களும் சர்ச்சைகளும் வந்த வண்ணம் இருந்தன. மூக்குத்தி அம்மன் 2 படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு சாந்தப்படுத்தினார். தற்போது, இயக்குநர் சுந்தர் சியும் விளக்கம் அளித்திருப்பதால் நயன்தாரா பக்கம் எந்த தவறும் இல்லை என அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











