எதிர்ப்பு காரணமாக தமிழ்நாட்டுக்கு வராமல் பாங்காக்கில் குத்தாட்டம் போட்ட சன்னி லியோன்!
சென்னை: ஆபாசப் பட நடிகையான சன்னி லியோன் தன் முதல் தமிழ்ப் படமான வடகறியில் இடம் பெறும் குத்துப் பாடலுக்கு பாங்காக்கில் வைத்து ஆடிக் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் முன்னணி ஆபாசப்பட நடிகையாகத் திகழ்பவர் சன்னி லியோன். நூற்றுக்கும் மேற்பட்ட 'செக்ஸ்' படங்களில் நடித்து இருக்கிறார். இவர் தற்போது இந்திப் படங்களில் மகா கவர்ச்சி உடைகளில் தோன்றி வருகிறார்.
சன்னி லியோனை 'வடகறி' படத்தில் குத்துப் பாடலுக்கு ஆட ஒப்பந்தம் செய்துள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.
இந்த படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். சரவணன் இயக்குகிறார். சன்னி லியோன் தமிழ் படத்தில் நடிக்க இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

நீலப்பட நடிகையை தமிழ்படத்தில் நடிக்க வைப்பது கலாசார சீரழிவுக்கு வழிவகுத்து விடும் என கண்டனங்கள் எழுந்தன. இதனால் சன்னி லியோன் இப்படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது.
தற்போது எதிர்ப்பை மீறி சன்னி லியோன் இந்த படத்தில் நடித்துள்ளார். சென்னைக்கு வந்து நடித்தால் பிரச்சினை கிளம்பும் என்பதால், ஜெய் - சன்னி லியோன் இணைந்து ஆடிய குத்தாட்ட பாடல் காட்சியை பாங்காக்கில் படமாக்கியுள்ளனர்.
சன்னி லியோனுடன் ஜெய் நடனம் ஆடுவது மாதிரி கனவு காண்பது போல் இக்காட்சியை அமைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











