ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்யும் சன்னி லியோன்
மும்பை: கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பிரபல நகை பிராண்டின் சார்பில் ஃபேஷன் ஷோவில் ராம்ப் வாக் செய்ய உள்ளார்.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட செட்டிலாகிவிட்டார். இந்தி படங்களில் நடிப்பது தமிழில் குத்தாட்டம் போடுவது என்று பிசியாகத் தான் உள்ளார்.
இந்நிலையில் தெலுங்கு படத்தில் வேறு நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஃபேஷன் ஷோ
இந்தியா இன்டர்நேஷனல் ஜுவல்லரி வீக் என்ற நகை ஃபேஷன் ஷோவில் சுமித் சாஹ்னி வடிவமைத்துள்ள நகைகளை அணிந்து ராம்ப் வாக் செய்யவிருக்கிறார் சன்னி.

ராஜ நகைகள்
சுமித் வடிவமைத்துள்ள நகைகளை அணிந்து பழங்குடியின ராணி அவதாரத்தில் ஃபேஷன் ஷோவில் நடக்க உள்ளார் சன்னி லியோன்.

சன்னி
முதல்முறையாக பழங்குடியினத்து ராணி போன்று மேக்கப்போட்டு நகை அணிந்து ராம்ப் வாக் செய்ய உள்ளேன். இதனால் ஒரு ராஜ பரம்பரை உணர்வு ஏற்படுகிறது என்று சன்னி தெரிவித்துள்ளார்.

அபாலா
சன்னி அணியப் போகும் நகைகள் அபாலா பிராண்ட் நகைகள் ஆகும். அபாலா என்றால் சமஸ்கிருதத்தில் மிகவும் அழகு என்று அர்த்தமாம்.

ஷோ ஸ்டாப்பர்
ஃபேஷன் ஷோவில் சன்னி ராம்ப் வாக் மட்டும் செய்யவில்லை அவர் தான் ஷோ ஸ்டாப்பர். அதாவது அவர் தான் நகை வடிவமைப்பாளரின் கையை பிடித்துக் கொண்டு நடந்து வருவார்.


Click it and Unblock the Notifications











