2 படத்துல நடிச்சதுக்கே இந்த அலப்பறையா?: பத்திரிக்கையாளர்களை கடுப்பாக்கிய சன்னி
பெங்களூர்: நடிகை சன்னி லியோனால் பெங்களூரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணிக்கணக்கில் காக்க வைத்த சன்னி லியோனால் பத்திரிக்கையாளர்கள் கடுப்பாகினர்.
நடிகை சன்னி லியோன் தான் நடித்துள்ள ஜாக்பாட் இந்தி படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த வாரம் பெங்களூர் வந்தார். அவருடன் படத்தில் நடித்துள்ள சச்சின் ஜோஷியும் வந்திருந்தார்.
இந்த 2 பேர் வந்ததற்கே பெங்களூரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பந்தா
சன்னியும், சச்சினும் பெங்களூரில் உள்ள எம்.ஜி.ரோடு அருகே உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் மதிய வேளையில் வந்திறங்கினார்கள்.

பிரஸ் மீட்
பத்திரிக்கையாளர்களை அரை மணிநேரத்தில் பேட்டி கொடுத்து முடித்து அனுப்பி விடுவோம் என்றனர். இதை நம்பி ஹோட்டலில் வந்து காத்துக்கிடந்த பத்திரிக்கையாளர்கள் கால் கடுக்க காத்திருந்திருந்தனர். மேலும் அவர்களுக்காக ஹோட்டலின் லிப்ட் வேறு 25 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ஹோட்டலில் ஒரே குழப்பமாக இருந்தது.

சாவகாசம்
சன்னியும், சச்சினும் சாவகாசமாக பிற்பகல் 3.30 மணிக்கு தான் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 2 படத்தில் நடித்ததற்கே இத்தனை அலப்பறையாக என்று செய்தியாளர்கள் கடுப்பாகிவிட்டனர்.

போக்குவரத்து
அம்மணியும் உடன் வந்தவரும் ஷாப்பிங் மாலில் நடந்த விளம்பர நிகழ்ச்சிக்கு கிளம்பினார்கள். அவர்களுக்கு அவர்கள் வேலை தான் பெரிதாக தெரிந்தது. அவர்கள் போக்குவரத்து மற்றும் போலீசாருக்கு தலைவலி கொடுத்து இஷ்டம் போல சாலையை கடந்து மாலுக்கு சென்றனர். இதனால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலுக்கு பெயர்போன பெங்களூரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.


Click it and Unblock the Notifications











