'கிக்கு கொடு'... சன்னிலியோன் அறிமுகப் படுத்தும் XXX ட்ரிங்ஸ்
மும்பை: சிலர் தொட்டதெல்லாம் பொன்னாகும்.. சிலர் தொடுவதெல்லாம் 'கிக்' ஆகும். அந்த வகையில், கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது கவர்ச்சியை முதலீடாக வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறார்.
சமீபத்தில் சச்சின் ஜோஷியின் புதிய டிரிபிள் எக்ஸ் சத்து பானத்திற்கான பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டார் சன்னி. இதையடுத்து அதுதொடர்பான விளம்பர போட்டோஷூட்டில் கலந்து கொண்டார்.
மும்பையில் ஏப்ரல் 15ம் தேதி நடந்த புகைப்பட ஷூட்டில் கவர்ச்சிகரமான உடையில் சன்னி லியோன் போஸ் கொடுத்தார். அதுகுறித்த ஒரு தொகுப்பு...

சக்தி கொடு...
டிரிபிள் எக்ஸ் என்ற சக்தி பானத்திற்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார் சன்னி லியோன். சச்சின் ஜோஷியின் நிறுவனத்தைச் சேர்ந்தது இந்த டிரிபிள் எக்ஸ் பானம்.

சன்னியின் தயவில்...
இந்த சத்து பானத்திற்கு நல்ல மார்க்கெட்டைப் பிடிக்க சச்சின் யோசித்தது சன்னி லியோனைத்தான். அவரை விளம்பர தூதராக இருக்குமாறு சச்சின் கேட்க, பெரும் தொகைக்கு ஒப்பந்தமானார் சன்னி.

போட்டோஷூட்...
இதையடுத்து மும்பை பிலிமிஸ்தானில் ஏப்ரல் 15ம் தேதி போட்டோஷூட் நடத்தப்பட்டது.

விதம் விதமாக போஸ்...
இதில் கவர்ச்சிகரமான உடையில் சத்து பானத்தை கையில் ஏந்தியபடியும், குடிப்பது போலவும் போஸ் கொடுத்தார் சன்னி.

நிருபர்களுக்கு சளைக்காமல் பதில்
போட்டோ ஷூட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களையும் சந்தித்தார் சன்னி லியோன். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொன்னார் சன்னி லியோன்.

ஓவர் டோஸ்...
சன்னியைப் பார்த்தாலே ரசிகர்களுக்கு உற்சாகம் பொங்குமே... இதுல ஊட்டச்சத்து பானம் வேறயா?


Click it and Unblock the Notifications











