சம்மர் வந்தாலே சன்னி லியோனை கையிலே பிடிக்க முடியாது.. மாலத்தீவுக்கு மறுபடியும் டூர் கிளம்பிட்டாரு!
சென்னை: சன்னி லியோன் தமிழ் பேசுவதை பார்க்க கோலிவுட் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
ஷீரோ மற்றும் ஓ மை கோஸ்ட் என இரு படங்கள் தமிழில் வெளியாக உள்ளதாக அறிவித்த சன்னி லியோன் அதன் படப்பிடிப்புகளை முடித்தும் இன்னமும் எந்தவொரு அப்டேட்டும் கொடுக்கவில்லையே என ரசிகர்கள் புலம்பி வரும் நிலையில், சம்மரை கொண்டாட ஜாலி டூர் கிளம்பி விட்டார் சன்னி லியோன்.
சம்மர் வந்ததும் ஏகப்பட்ட நடிகைகள் மீண்டும் மாலத்தீவுக்கு சுற்றுலா கிளம்பியுள்ள நிலையில், இன்ஸ்டாகிராம் முழுவதும் பிகினி புகைப்படங்களின் அணிவகுப்புகள் அரங்கேறி வருகின்றன.

சம்மர் ஸ்டார்ட்
கோடை வெப்பம் கொளுத்தி வரும் நிலையில், நடிகைகள் எல்லாம் தண்ணீர் அதிகமாக இருக்கும் தீவுகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கொரோனாவுக்கு பிறகு சுற்றுலாவை மீண்டும் விரிவுப்படுத்த மாலத்தீவு நடிகைகளுக்கு டிஸ்கவுன்ட் அளித்த வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளை தொடர்ந்து இந்த ஆண்டும் மாலத்தீவுக்கு நடிகைகள் படையெடுத்து வருகின்றனர்.

மாலத்தீவில் சன்னி லியோன்
ஆபாச படங்களில் இனி நடிக்கப் போவதில்லை என தீர்மானம் எடுத்து கவர்ச்சி நடிகையாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்த சன்னி லியோன் தென்னிந்திய மொழி படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கொஞ்சம் சில்லாக்ஸ் செய்ய சம்மர் டூருக்கு மாலத்தீவு பறந்துள்ளார். அங்கே அவர் எடுத்துக் கொண்ட போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து இளைஞர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

பிகினி தரிசனம்
40 வயதை கடந்தாலும் நடிகை சன்னி லியோன் பிகினி தரிசனத்தை கொடுப்பதை நிறுத்தாமல் ரசிகர்கள் கண்களை இந்த கோடை காலத்தில் குளிரூட்டி வருகிறார். மாலத்தீவில் படு கவர்ச்சி பிகினி அணிந்து கொண்டு விடுமுறையை கொண்டாடும் சன்னி லியோன் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களுக்கு பல லட்ச கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

கடலில் உற்சாக குளியல்
மாலத்தீவு கடல் கண்ணாடி போல மின்னுவதால் நடிகைகள் அங்கே சுற்றுலா செய்ய பெரிதும் ஆசைப்படுகின்றனர். கோலிவுட் நடிகைகள் முதல் பாலிவுட் நடிகைகள் வரை பலரும் அங்கே சென்று பிகினி உடைகளில் வெளியிடும் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. கடலில் உற்சாக குளியல் போட்டு நீந்தும் புகைப்படங்களையும் சன்னி லியோன் தற்போது ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகிறார்.
Recommended Video

ரசிகர்கள் வெயிட்டிங்
தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் உருவாகி உள்ள ஷீரோ மற்றும் தமிழில் உருவாகி வரும் ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்புகளை எப்பவோ முடித்து விட்டு வெப் தொடர்களில் நடித்து வரும் நடிகை சன்னி லியோனின் தமிழ் படங்கள் எப்போது ரிலீசாகும் என்றும் இதுவரை எந்தவொரு அப்டேட்டும் ஏன் கொடுக்கவில்லை என ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கேட்டு தமிழ் பேசும் சன்னி லியோனை காண ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











