சன்னிக்கு மெழுகுச் சிலை: இதில் சிலை எது, நிஜம் எது என்று கண்டுபிடிங்க
டெல்லி: டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை சன்னி லியோனின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்துக் கொண்டிருந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். படங்கள், விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சி என்று அவர் ஒரு பக்கம் பிசியாக இருக்கிறார்.

மும்பையில் செட்டிலான பிறகு நிஷா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார், வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தாயானார். இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் சன்னி லியோனின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.
மெழுகுச் சிலையை திறந்து வைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார் சன்னி. இந்த சிலையை செய்ய லண்டனில் இருந்து டுசாட்ஸ் ஆட்கள் மும்பைக்கு வந்து சன்னியை சந்தித்து அளவு எடுத்துச் சென்றனர்.
இது குறித்து சன்னி கூறியதாவது,
எனக்கு சிலை வைக்கப்பட்டது த்ரில்லாக உள்ளது. இந்த கவுரவத்திற்காக என்னை தேர்வு செய்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அழகான சிலையை செய்தவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











