Sunny Leone: காவாலா பாட்டுக்கு கன்னா பின்னாவென நடனமாடும் சன்னி லியோன்.. என்ன கேப்ஷன் தெரியுமா?
சென்னை: ஜெயிலர் படத்தின் காவாலா பாடலுக்கு நடிகைகள் முதல் ஏஐ வரை நடனமாடிய நிலையில், இன்னமும் அந்த ஃபீவர் குறையவில்லை. நடிகை சன்னி லியோன் தற்போது அந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வரை வசூல் ஈட்டியதாக கூறப்படுகிறது.

அனிருத் இசையில் தமன்னா தாறுமாறாக நடனமாடிய காவாலா பாடல் 2 மாதங்களில் 199 மில்லியன் வியூஸ் கடந்து டிரெண்டாகி வருகிறது. கூடிய விரைவிலேயே 200 மில்லியனை தாண்டி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
காவாலா ஏஐ டான்ஸ்: காவாலா பாட்டுக்கு தமன்னா ஆடிய நடனத்தை வைத்து ஏஐ தொழில்நுட்பம் மூலமாக சிம்ரன், காஜல் அகர்வால், கீர்த்தி சுரேஷ், கியாரா அத்வானி உள்ளிட்ட பல பிரபல நடிகைகள் நடனம் ஆடியது போன்ற ஏஐ எடிட்களை போட்டு தெறிக்கவிட்டனர்.
மேலும், இரவின் நிழல் நடிகை சாய் பிரியங்கா ரூத், குஜராத் நடிகை சோபியா அன்சாரி, சூர்ய பிரபா, அமலா ஷாஜி என பலரும் அந்த பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோக்கள் டிரெண்டாகின.
சன்னி லியோன் டான்ஸ்: இந்நிலையில், காவாலா ஃபீவர் ஓய்ந்து விட்டது என பார்த்த ரசிகர்களுக்கு திடீரென நடிகை சன்னி லியோன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காவாலா பாடலுக்கு நடனமாட பிராக்டீஸ் செய்யும் வீடியோவை வெளியிட்டு ஆச்சர்யத்தை அளித்துள்ளார்.
ஸ்டெப்ஸ் எல்லாம் சொதப்பிடுச்சு: ஸாரி காவாலா பாட்டுக்கு தப்பு தப்பா ஸ்டெப்ஸ் போட்டு ஆடுறேன்னு தெரியுது.. ஆனால், அந்த ஷாட் வீடியோவில் எல்லாத்தையும் சரி செய்து விடுவேன் என நம்புகிறேன். சீக்கிரமே உங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது என சன்னி லியோன் பக்காவான கேப்ஷனையும் போட்டு ரசிகர்களை ஹேப்பி ஆக்கி உள்ளார்.
தமிழில் சன்னி லியோன் சமீபத்தில் ஓ மை கோஸ்ட் படத்தில் பேயாக நடித்திருந்தார். ஷீ, கொட்டேஷன் கேங் உள்ளிட்ட தமிழ் படங்களும் சன்னி லியோன் நடிப்பில் விரைவில் ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











