தொகுப்பாளினியாக மாறிய சன்னி லியோன்..என்ன நிகழ்ச்சி தெரியுமா!
சென்னை: ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் நிகழ்ச்சியின் 15 வது சீசன் இந்த முறை தமிழில் ஒளிபரப்பாக இருக்கிறது. 2கே கிட்ஸ் இளைஞர்களின் ஆதரவை பெற்ற நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது.பாலிவுட்டின் பிரபல நடிகை சன்னி லியோனி தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்தி தொலைக்காட்சி உலகில் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிரபலமான நிகழ்ச்சியாக இருக்கிறது. ஸ்ப்ளிட்ஸ் வில்லா. இந்த டேட்டிங் ஷோ நிகழ்ச்சியை நடிகை உர்ஃபி ஜாவத் மற்றும் தனுஜ் ஆகியவருடன் சேர்ந்து வழங்கிய நிலையில் தற்போது, இந்த நிகழ்ச்சியை சன்னிலியோன் தொகுத்து வழங்க ஆரம்பித்து இருக்கிறார். இதன் மூலமாக தமிழில் அவர் முதல் முறையாக தொகுப்பாளினியாக அவதரிக்கிறார்.

21 இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களை கொண்டு தங்களது துணையை கண்டுபிடிக்கும் இந்த நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் மாலை 7 மணிக்கு ஜியோ சினிமா மற்றும் எம் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதுவரை இந்த நிகழ்ச்சி தமிழில் ஒளிபரப்பாகாத நிலையில், தற்போது முதன் முறையாக தமிழில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் வீடியோ பாடலை நடிகை சன்னி லியோன், தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
சன்னி லியோன்: ஹாலிவுட்டில் வெளியான பார்ன் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை சன்னி லியோன் இப்பொழுது இந்திய திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கி இந்தியில் ஏகப்பட்ட படவாய்ப்புகளை குவித்து வருகிறார். 2012 ஆம் ஆண்டு வெளியான ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் தடத்தைப் பதித்தார். இதையடுத்து, ராகினி எம்எம்எஸ் 2 படத்தில் வியக்க வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார்.
ஓ மை கோஸ்ட் : நடிகை சன்னி லியோன் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி திரைப்படத்தில் லோ ஆன லைஃபு என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி தமிழ் ரசிகர்களுக்கும் தெரிந்த முகமானார். இதையடுத்து சன்னி லியோன் யுவன் இயக்கத்தில் ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் லீட் ரோலில் நடித்திருந்தார். இப்படம் டிசம்பர் மாதம் திரையரங்கில் வெளியானது. இதில், சன்னி லியோன், ஜி பி முத்து, சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் நடித்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











