சிறுசுகளும், பெரிசுகளும் என்னை விரும்புவது மகிழ்ச்சி- சன்னி லியோன்
மும்பை: இளைஞர்கள் முதல் வயோதிகர் வரை என்னை விரும்புகிறார்கள். அந்த அளவுக்கு நான் வசீகரமாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார் இந்திய - கனடா நாட்டு நடிகை சன்னி லியோன்.
கனடாவின் அடல்ட் பிலிம் நடிகை என்ற பெயர் பெற்ற சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் நடித்து வருகிறார். ஹீரோயின், குத்துப் பாட்டுக்கு டான்ஸ், விளம்பர நடிப்பு என பிசியாக இருக்கும் சன்னி லியோனின் நடிப்பை விட அவரது கவர்ச்சிக்கே அதிக டிமாண்ட்ஏற்பட்டுள்ளது.
பூஜா பட்டின் ஜிஸ்ம் 2 படத்தில் நடித்த அவர் அடுத்து ராகினி எம்எம்எஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஷூட் அவுட் அட் வட்லா என்ற படத்தில் லைலா என்ற ஐட்டம் பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார்.
இந்த நிலையில் தனக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து பேசியுள்ளார் சன்னி லியோன்.

நனவான கனவு
பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. தற்போது அது நனவாகியுள்ளது. இது மகிழ்ச்சி தருகிறது. மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

நல்ல வாய்ப்புகள் .. ஆசிர்வதிக்கப்பட்டவள்
என்னைத் தேடி வரும் வாய்ப்புகள் என்னை மகிழ்ச்சிப்படுத்துகிறது. நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். இதுவரை எல்லாமே நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.

என்னையும் ஏற்றுக் கொண்டார்களே... நன்றி
என்னையும் இங்குள்ள மக்கள் ஒரு நடிகையாக ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி தருகிறது.

எல்லோரையும் கவருகிறேனே...
இளைஞர்கள், முதியவர்கள் என சகல தரப்பு ஆண்களும் என்னை விரும்புகிறார்கள். அந்த அளவுக்கு வசீகரமாக இருப்பது மகிழ்ச்சி தருகிறது. இது அதிர்ஷ்டம்.

லைலா பாட்டுக்கு நல்ல வரவேற்பு
நான் ஆடியுள்ள ஐட்டம் பாடலான லைலா பாட்டுக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி தருகிறது. இந்தப் பாடலுக்கு ஆடி நடித்தது குஷியான அனுபவம். இதற்கு ரசிகர்கள்தான் காரணம்.

பிரியங்கா படத்தில் நான் இருப்பது புண்ணியம்
இதே படத்தில் பிரியங்கா சோப்ராவும் பப்ளி பத்மாஷ் என்ற பாடலுக்கு ஆடியுள்ளார். பிரியங்கா இடம் பெற்ற படத்தில் நானும் இடம் பிடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்றார் சன்னி லியோன்.


Click it and Unblock the Notifications











