சன்னி லியோனின் அடுத்த தமிழ் பட டைட்டில் வெளியானது.. ஜிபி முத்து, தர்ஷாலாம் இதுல தான் நடிக்கிறாங்க!
சென்னை: நடிகை சன்னி லியோனின் அடுத்த தமிழ் பட டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது.
சமீபத்தில் மலையாள இயக்குநர் இயக்கும் ஷீரோ படம் தான் தனது முதல் தமிழ் படம் என அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், சன்னி லியோன், சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ஜிபி முத்து, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேய் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் ஆர்வம்
பார்ன் ஸ்டாராக சர்வதேச அளவில் கலக்கி வந்த சன்னி லியோன், கிளாமர் குயினாக பாலிவுட்டில் கால் பதித்தார். இந்தியா முழுவதும் தனக்கு இருக்கும் செல்வாக்கை உணர்ந்து கொண்ட சன்னி லியோன் மலையாளம் மற்றும் தமிழ் மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

முதல் தமிழ் படம்
மலையாளத்தில் ரங்கீலா எனும் படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் அடுத்ததாக மலையாள இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் உருவாகி வரும் ஷீரோ படத்தில் நடித்து வருகிறார். பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் அந்த படம் தான் தனக்கு முதல் தமிழ் படம் என சமீபத்தில் சன்னி லியோன் ட்வீட் போட்டிருந்தார். ஆனால், ஏற்கனவே ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலில் மட்டும் நடித்திருந்தார் சன்னி லியோன்.

ஹாரர் மூவி
பேய்களை வைத்து காமெடி செய்து ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வெற்றிப் பெற்றுள்ள நிலையில், நடிகை சன்னி லியோனை வைத்து அப்படியொரு முயற்சியை எடுக்க இயக்குநர் யுவன் முடிவு செய்துள்ளார். மலையாளத்தில் ஷீரோ படத்தில் நடித்து வரும் சன்னி லியோன் கையோடு அப்படியே இந்த படத்திலும் நடித்து வருகிறார்.

தர்ஷா முதல் ஜிபி முத்து வரை
காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகி வரும் இந்த படத்தில், சன்னி லியோன் உடன் இணைந்து ஏகப்பட்ட தமிழ் நடிகர்கள் நடித்து வருகின்றனர். நடிகர் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, ஜிபி முத்து, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்த பேய் படத்தில் ரகளை செய்துள்ளனர்.

ஓ மை கோஸ்ட்
ஏற்கனவே தமிழில் ஓ மை கடவுளே என்கிற டைட்டிலில் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடித்த படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில், சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா, டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து இணைந்து நடிக்கும் இந்த படத்துக்கு OMG - ஓ மை கோஸ்ட் என்ற அட்டகாசமான டைடிட்டில் வைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











