சன்னி லியோனுக்கே இது நடந்திருக்கா?.. கல்யாணத்துக்கு எல்லாமே ரெடி.. கடைசி நேரத்தில் ஏமாற்றிய எக்ஸ்!

மும்பை: அமெரிக்காவில் ஆபாச நடிகையாக வலம் வந்த சன்னி லியோன் அதையெல்லாம் விட்டுவிட்டு டேனியல் வெப்பரை திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தாயாக தற்போது தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் ரியாலிட்டி ஷோக்களையும் நடத்தி வருகிறார். ஸ்பிலிட்ஸ் வில்லா ரியாலிட்டி ஷோவை தொடர்ந்து டேட்டிங் ஷோவான 'ExSqueeze Me Please' ரியாலிட்டி ஷோவை தற்போது நடத்தி வரும் சன்னி லியோன் அதன் லேட்டஸ்ட் எபிசோடில் தனது முன்னாள் காதலர் பற்றியும் கடைசி நேரத்தில் தன்னை எப்படி ஏமாற்றினார் என்பது குறித்தும் பேசி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Sunny Leone opens up how her ex fiancee cheated at the last time of marriage shocks fans

42 வயதாகும் சன்னி லியோன் கடைசியாக ஓ மை கோஸ்ட் என்னும் தமிழ் படத்தில் நடித்திருந்தார். மேலும் ஷீரோ, கொட்டேஷன் கேங் போன்ற படங்களில் நடித்துள்ளவர் அதன் ரிலீசுக்காக காத்திருக்கிறார்.

அகில உலக ஃபேமஸ்: ஆபாச நடிகை சன்னி லியோன் வலம் வந்து நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அவரது பெயர் தெரியும் படி பிரபலமாக இருந்தார். கூகுள் தேடலில் இந்தியாவில் டாப் நடிகர்களை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்தது சன்னி லியோன் தான். பல ஆண்டுகள் அதே நிலைமை தொடர்ந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தனக்கு இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருப்பதை அறிந்து கொண்ட சன்னி லியோன் ஆபாச படங்களில் நடிப்பதை விட்டுவிட்டு பாலிவுட் நடிகையாக மாறினார்.

Sunny Leone opens up how her ex fiancee cheated at the last time of marriage shocks fans

திரைப்படங்களில் சன்னி லியோன்: ஜிசம் 2 எனும் பாலிவுட் படத்தில் கவர்ச்சி கன்னியாக நடித்த சன்னி லியோன் ஜாக்பாட், ராகினி எம்எம்எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2, வடகறி. ஒன் நைட் ஸ்டாண்ட், சிங் இஸ் பிளிங், ஷாருக்கானின் ராயில் உள்ளிட்ட பல படங்களில் நடிகையாகவும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் சினிமாவில் பிரபலமானார். தமிழில் இவர் பேயாக நடித்த ஓ மை கோஸ்ட் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியானது. பாலிவுட்டை தொடர்ந்து கோலிவுட், மல்லுவுட் மற்றும் சாண்டல்வுட் படங்களில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏமாற்றிய முன்னாள் காதலர்: ஆபாச நடிகையாக வலம் வந்த சன்னி லியோன் ரசல் பீட்டர்ஸ் எனும் ஸ்டாண்ட் அப் காமெடியனை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள தயாராகி திருமண ஏற்பாடுகள், திருமணத்துக்கான உடைகள் என அனைத்தும் ரெடியான நிலையில், கடைசி நேரத்தில் இந்த கல்யாணத்தில் தனக்கு விருப்பமில்லை என சன்னி லியோனிடம் தெரிவித்துவிட்டு கம்பியை நீட்டி விட்டார் முன்னாள் காதலர். அவர் குறித்து சமீபத்தில் ரியாலிட்டி ஷோ ஓன்றில் சன்னி லியோன் பேசி இருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

நம்பி ஏமாந்தேன்: இவர் நமக்கு சரியான ஆள் என நினைத்து காதலில் விழுந்து திருமணக் கனவுகளுடன் இருந்த நிலையில் திருமணத்துக்கு முன்னதாக இரண்டு மாதங்ளுக்கு முன்னர் அவருக்கு என் மீது காதல் இல்லை என்று சொல்லிவிட்டு ஏமாற்றி சென்றுவிட்டார் என சன்னி லியோன் எமோஷனாலாகி பேசியது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

Sunny Leone opens up how her ex fiancee cheated at the last time of marriage shocks fans

கடவுள் தந்த பரிசு: அந்த நபர் தனது வாழ்க்கையில் இருந்து விலகிச் சென்றாலும் எனக்கு கடவுள் தந்த பரிசாக டேனியல் வெப்பர் கிடைத்தார். ஆரம்பத்தில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுக்க வேண்டும் என நான் கூறியதற்கு சம்மதித்தார். எங்களுக்கு ட்வின்ஸ் ஆண் குழந்தைகள் பிறந்தாலும் 3 குழந்தைகளுடன் இப்போதும் மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என சன்னி லியோன் எக்ஸ் லவ்வர் ஏமாற்றினாலும் நமக்கான வாழ்க்கை நமக்கு கிடைக்கும் என்பதை போட்டியாளர்கள் மத்தியில் எடுத்துக் கூறி அந்த டேட்டிங் நிகழ்ச்சியில் நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X