ரசிகரின் வெறித்தனமான செயல்... உற்சாகமான சன்னி லியோன்
மும்பை : இந்திய அளவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருப்பவர் சன்னி லியோன். இவரது அடுத்தடுத்த படங்கள், கவர்ச்சி நடனங்கள் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகின்றன. பாலிவுட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் மற்ற மொழிப்படங்களிலும் இவர் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை சன்னி லியோன்
நடிகை சன்னி லியோன் இந்தியாவில் பிறந்தாலும் சிறு வயதிலேயே அமெரிக்காவில் குடும்பத்தினருடன் குடிபெயர்ந்தவர். மாடலிங்கில் கால்பதித்த இவர், தொடர்ந்து ஆபாசப் படங்களில் நடித்து உலக அளவில் புகழ் பெற்றார். இதையே தனது தொழிலாகவும் மாற்றிக் கொண்டார்.

பாலிவுட்டில் பிசி
ஆனால் இந்தப் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்ட இவர், தொடர்ந்து பாலிவுட் படங்களில் தற்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் மட்டுமின்றி இந்திய மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். தன்னுடைய கவர்ச்சியான நடிப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகையாக இருந்து வருகிறார்.

வெறித்தனமான ரசிகர்கள்
இவருக்கு ஏராளமான வெறித்தனமான ரசிகர்கள் இந்திய அளவில் காணப்படுகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்புன்போது ரசிகர் ஒருவரின் கையைப் பார்த்து இவர் ஆச்சர்யமும் நெகிழ்ச்சியும் அடைந்துள்ளார். படப்பிடிப்பின்போது சன்னி லியோனை பார்ப்பதற்காக ஓடிவந்த ரசிகர் ஒருவர், தன்னுடைய கையை காட்டியுள்ளார்.

டாட்டூ குத்திய ரசிகர்
அதில் சன்னி லியோனின் பெயர் டாட்டூவாக இருந்ததைக் கண்ட சன்னி லியோன் அவரிடம் நீண்ட நேரம் பேசியுள்ளார். மேலும் அந்த டாட்டூவை வீடியோவாக எடுத்து தன்னுடைய சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த டாட்டூ மிகவும் அற்புதமாக இருப்பதாகவும் மிக்க நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

எப்போதும் காதலியுங்கள்
மேலும் அந்த ரசிகருக்கு அவர் ஒரு மெசேஜையும் தெரிவித்துள்ளார். அதில் நீங்கள் எப்போதும் என்னை காதலித்துக் கொண்டே இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் இப்போதைக்கு உங்களுக்கு வாய்ப்பு குறைவு என்றும் விரைவில் நல்ல மனைவியை கண்டுபிடியுங்கள் என்றும் குறும்புடன் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











