முதன் முதலாக ஆபாச படம் பார்த்ததும்.. பாலிவுட் நடிகை செய்த செயல்.. வாழ்க்கையே மாறிப்போச்சு

மும்பை: பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோன், தனது வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டிருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக தனது இளம் வயதில் எடுத்த ஒரு முடிவு குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

சன்னி லியோன் இன்று பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக அறியப்பட்டாலும், தனது திரைப்பயணத்தின் ஆரம்பத்தில் ஆபாச திரைப்படத் துறையில் பணியாற்றியிருந்தார் என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். பின்னர் அந்த துறையில் இருந்து முழுமையாக விலகி இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். இந்த நிலையில், தனது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு அனுபவம் குறித்து அவர் பேசியுள்ளார்.

வெப் தொடரில் பகிர்ந்த ரகசியம்: தனது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "கரண்ஜித் கௌர்: தி அன்டோல்ட் ஸ்டோரி" என்ற வெப் தொடரில் இதுகுறித்து அவர் மனம் திறந்துள்ளார். அதில், முதல் முறையாக ஆபாச திரைப்படம் ஒன்றைப் பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட மனநிலையை அவர் விவரித்துள்ளார்.

அப்போது பேசிய சன்னி லியோன், அந்த திரைப்படத்தை பார்த்த பிறகு மிகவும் வருத்தமடைந்ததாக கூறியுள்ளார். தான் செய்தது மிகப்பெரிய தவறு போல உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனால் வீட்டில் இருந்த குருநானக் தேவ் படத்தின் முன்பு அமர்ந்து நீண்ட நேரம் அழுததாகவும் அவர் கூறியுள்ளார்.

Sunny Leone Reveals Emotional Reaction After Watching an Adult Film for the First Time

கண்ணீர்: "பாபாஜி, எனக்கு எதுவும் தெரியவில்லை. நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்" என்று மனமுருகி மன்னிப்பு கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த தருணம் தனது வாழ்க்கையில் மிகவும் உணர்ச்சிகரமான அனுபவங்களில் ஒன்றாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

குடும்பத்தினரின் அதிருப்தி: சன்னி லியோன் தனது 19வது வயதில் அந்த துறையில் அடியெடுத்து வைத்ததாகவும், அவரது இந்த முடிவு குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அவரது பெற்றோர் மிகவும் கோபமடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

பாலிவுட் வாழ்க்கை: பின்னர் அந்த துறையில் இருந்து விலகி இந்தியா வந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்திய அவர், பல திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வெப் தொடர்களில் தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் சன்னி லியோனின் இந்த பழைய நினைவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X