எமர்ஜென்ஸி.. 30 நொடியில மாஸ்க் ரெடி பண்ணனுமா.. சன்னி லியோன் கொடுக்கும் செம ஐடியா!

மும்பை: எமர்ஜென்ஸி காலத்தில் 30 நொடியில் மாஸ்க் செய்வது எப்படி என நடிகை சன்னி லியோன் ஐடியா கொடுத்துள்ளார்.

Recommended Video

Kaadan Release date | Alia Bhatt Ranbir Kiss | Sunny Leone Bored Tweet | Julie Tik Tok

சம்மர் ஸ்பெஷலாக தினம் தினம் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் சன்னி லியோன்.

இந்நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி மாஸ்க் செய்வது என புகைப்படங்களாக பதிவிட்டுள்ளார் சன்னி லியோன்.

மாஸ்க் கட்டாயம்

கொரோனா காலத்தில் மாஸ்க் இல்லாமல் வெளியே சென்றால் அபராதத் தொகை விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாஸ்க் அணிந்து செல்வது, கொரோனா பாதிப்பை தடுக்கும் என்பதற்காகவே இப்படியொரு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது. மருத்துவ மாஸ்க்குகள் கிடைக்கவில்லை என்றால் கூட வீட்டில் இருக்கும் துணிகளை வைத்து மாஸ்க் செய்து கொள்ளலாம் என பல நடிகர்களும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

கர்ச்சீப் மாஸ்க்

கர்ச்சீப் மாஸ்க்

எல்லோருக்கும் எளிய முறையில் மாஸ்க் செய்துக் கொள்ள கர்ச்சிப் ஒன்றே போதும், கர்ச்சீப்பை வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளும் படி கட்டிக் கொண்டு பலரும் வெளியே சுற்றி வரும் நிலையில், நடிகை சன்னி லியோன், இந்த அவசர காலத்தில் வெளியே செல்ல 30 நொடிகளில் கர்ச்சீப் மாஸ்க்கை பயன்படுத்தலாம் என ஐடியா கொடுத்துள்ளார்.

கொசுவலை மாஸ்க்

கொசுவலை மாஸ்க்

அதே போல கொரோனாவில் இருந்து தப்பிக்க, வீட்டில் இருக்கும் கொசுவலையை அப்படியே உடையாக அணிந்து கொண்டு வெளியே செல்லலாம் என்றும் போட்டோ போட்டு சன்னி லியோன் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. முடிந்த வரை வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பதே சிறந்தது.

டயாப்பர் மாஸ்க்

டயாப்பர் மாஸ்க்

எல்லாத்தையும் விட குழந்தைகளுக்கு போடப்படும் டயாப்பரை மாஸ்க்காக மாற்றிக் கொண்டு சன்னி லியோன் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம், ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது. காட்டன் டயாப்பரால் முகத்தை மூடிய படி சன்னி லியோன் வெளியிட்டுள்ள டயாப்பர் மாஸ்க் தான் இந்த லிஸ்டிலேயே நல்ல ஐடியா என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

ஆமா இது எதுக்கு

ஆமா இது எதுக்கு

மாஸ்க் என்பதும் ஸ்பைடர் மேன் பட ஹீரோ அணியும் மாஸ்க்கையும் இந்த லிஸ்டில் சன்னி லியோன் எதற்கு சேர்த்தார் என்பது ரசிகர்கள் மத்தியில் கேள்வியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மூக்கு மற்றும் வாயை பொத்திக் கொள்ள வேண்டும் என்ற கான்செப்ட்டையே இந்த மாஸ்க்கில் காண வில்லையே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X