சன்னி லியோனின் முதல் தமிழ் படம்.. சிங்கப் பெண்ணாய் சீறும் ஷீரோ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சென்னை: ஹீரோ என்கிற தலைப்பில் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏகப்பட்ட படங்கள் வெளியாகி விட்டன.

கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடிப்பில் ஷீரோ என்கிற தலைப்பில் விரைவில் வெளியாகவுள்ள படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடிச் சென்றாலும் ஹீரோயினாக இது தான் தனக்கு முதல் தமிழ் படம் என அவரே ட்வீட்டில் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஆளே மாறிட்டாரு

ஆளே மாறிட்டாரு

ஆபாச பட நடிகையாக கூகுள் தேடல்களில் முதலிடம் பிடித்த சன்னி லியோன் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக மாறி இத்தனை ஆண்டுகளாக கலக்கி வருகிறார். மேலும், மற்ற மொழிகளில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டும் இந்தியா முழுக்க ரசிகர்களை ஈர்த்தார். ஆனால், தற்போது ஆளே மாறி ஆக்‌ஷன் ஹீரோயினாக மாறி விட்டார்.

ஷீரோ ஃபர்ஸ்ட் லுக்

ஷீரோ ஃபர்ஸ்ட் லுக்

சன்னி லியோன் ஷீரோ எனும் படத்தில் நடித்து வருவதாக சமீபத்தில் தான் அறிவித்தார். ஆனால், அதற்குள் அந்த படத்தின் ஷூட்டிங்கே முடிந்து விட்டது என ட்வீட் போட்ட அவர் தற்போது அந்த படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

முதல் தமிழ் படம்

முதல் தமிழ் படம்

ஏற்கனவே நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன், ஹீரோயினாக முதல் முறையாக தமிழில் நடித்துள்ளேன் என்பதை அறிவிக்கும் விதமாக தனது முதல் தமிழ் படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தனியாக குறிப்பிட்டு இருப்பது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

பான் இந்திய படம்

பான் இந்திய படம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள சன்னி லியோன் தமிழில் முதன் முறையாக அறிமுகமாக உள்ளேன் என தனியாக குறிப்பிட்டு இருப்பதை பார்த்தால் இந்த படம் தமிழ் ரசிகர்களையே பெரிதும் டார்கெட் செய்து எடுக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது.

சர்வைவர் படம்

தலையில் அடி பட்டு ரத்தக் காயத்துடன் இருக்கும் பெண் சிங்கமாக தற்போது வெளியாகி இருக்கும் ஷீரோ பட போஸ்டரில் மிரட்டுகிறார் நடிகை சன்னி லியோன். மலையாள இயக்குநர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படம் சர்வைவர் படமாக இருக்கும் என்பதையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தெளிவாக உணர்த்தி விட்டது.

சாரா மைக்

சாரா மைக்

இந்த படத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்ணாகவே நடிகை சன்னி லியோன் நடித்துள்ளாராம். சாரா மைக் எனும் கதாபாத்திரத்தை படித்த மாத்திரத்தில் இருந்தே நடிகை சன்னி லியோன் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டாராம். செம பவர் ஃபுல்லான கதாபாத்திரம் மூலம் சீக்கிரமே ரசிகர்களை மிரட்ட காத்திருக்கிறார் சன்னி லியோன்.

தமிழ் நடிகர்கள்

தமிழ் நடிகர்கள்

நடிகர் சதீஷ், ஜிபி முத்து, தர்ஷா குப்தா உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் நடிகை சன்னி லியோனின் திகில் படத்தில் நடிக்க உள்ளனர் என்கிற தகவல் சமீபத்தில் வெளியானது. ஆனால், அவர்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்களா? இல்லை இன்னொரு படத்தில் நடித்துள்ளார்களா என்பது குறித்த தகவல் இன்னமும் வெளியாகவில்லை.

ரங்கீலா

ரங்கீலா

மலையாள இயக்குநர் இயக்கத்தில் ஷீரோ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகை சன்னி லியோன் ரங்கீலா எனும் மலையாள படத்தின் ரிலீசுக்காகவும் காத்திருக்கிறார். தென்னிந்திய மொழிகளை டார்கெட் செய்து ஏகப்பட்ட புதிய ப்ராஜெக்ட்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார் சன்னி லியோன்.

டூப் இல்லாமல்

டூப் இல்லாமல்

அதிரடி ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி உள்ள ஷீரோ படம் முழுக்க மூணாறில் படமாக்கப்பட்டிருக்கு. இந்த படத்தில் வரும் ரியாலிட்டியான ஸ்டன்ட் காட்சிகளில் நடிக்க டூப் ஏதும் பயன் படுத்தாமல் நடிகை சன்னி லியோன் செம ரிஸ்க் எடுத்து நடித்துள்ளாராம்.

வரவேற்பு எப்படி இருக்கும்

வரவேற்பு எப்படி இருக்கும்

கவர்ச்சி நடிகை சன்னி லியோனுக்கு சர்வதேச அளவில் வரவேற்பு உள்ள நிலையில், சிங்கப்பெண் சன்னி லியோனுக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பு எப்படி இருக்கும் என்பது முழுக்க முழுக்க திரைக்கதையை மட்டுமே சார்ந்தது. நல்ல படமாக இருந்தால் நிச்சயம் தமிழ் ரசிகர்கள் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பார்கள். இல்லையென்றால் ட்ரோல் செய்து தூக்கி எறிந்து விடுவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X