லாக் டவுன் நேரம்.. சரக்குடன் திருமண நாளை கொண்டாடிய சன்னி லியோன்.. ஸ்பெஷல் போட்டோ வேற!
மும்பை: பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பருடன் தங்கள் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு இருப்பதால், கிராண்டாக பார்ட்டி நடத்தி கொண்டாட முடியாத நிலையில், சன்னி லியோன் மற்றும் டேனியல் வெப்பர் இருவரும் சிம்பிளாக வீட்டிலேயே மது அருந்தி திருமண நாளை கொண்டாடினர்.
அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார் சன்னி லியோன்.

ஆபாச பட நடிகர்
கரஞ்சித் கவுராக இருந்த சன்னி லியோன், ஆபாச பட உலகில் நடிக்கும் போது தனது பெயரை மாற்றிக் கொண்டு புகழின் உச்சத்திற்கே சென்றார். அமெரிக்காவை சேர்ந்த பாடலாசிரியரும், இசைக் கலைஞருமான டேனியல் வெப்பர் சன்னி லியோனுடன் இணைந்து ஆபாச படங்களில் நடித்து வந்த நிலையில், இருவரும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
View this post on InstagramA post shared by Daniel "Dirrty" Weber (@dirrty99) on
மது மட்டுமே
கொரோனா தாக்கம் இந்தியாவையும் விட்டு வைக்காத நிலையில், வரும் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருக்கிறது. மேலும், லாக் டவுனை நீட்டிக்கவும் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில், கிராண்டாக திருமண நாளை கொண்டாட முடியாத நிலையில், அட்லீஸ்ட் மதுக்கோப்பைகளுடனாவது நமது திருமண நாளை கொண்டாடுகிறோமே என டேனியல் வெப்பர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உருக்கம்
கணவர் டேனியல் வெப்பருடன் மது அருந்தும் அதே புகைப்படத்தை பதிவிட்டு, நடிகை சன்னி லியோன் உருக்கமான பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார். வாழ்க்கை எவ்வளவு கிரேஸியாக இருந்தாலும், நம் காதல் எப்போதுமே அழியாமல் நீண்டுக் கொண்டே போகும் என்று சன்னி லியோன் பதிவிட்டுள்ளதை பலரும் பாராட்டி, திருமண நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

சந்தோஷமாக
ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் இந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 5வது சீசன் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். பின்னர், ஜிஸ்ம் 2, ராகினி எம்.எம்.எஸ்., வடகறி, ஒன் நைட் ஸ்டாண்ட் என பல படங்களில் நடித்து வருகிறார். கணவன் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இந்த லாக் டவுனை சந்தோஷமாக கழித்து வருகிறார்.
ஸ்பெஷல் போட்டோ
சன்னி லியோனை சம்மரை கொண்டாடுங்கள் என கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து தினமும் வித விதமான கவர்ச்சி படங்களை களமிறக்கி வரும் சன்னி லியோன், திருமண நாளான நேற்றும், ரசிகர்களுக்கான சம்மர் ஸ்பெஷல் போட்டோவை போட தவறவில்லை. படகு ஒன்றில், வெள்ளை நிற பிகினியில் செம செக்ஸியாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











