சன்னி லியோனிடம் "ஆபாச" கேள்வி கேட்ட செய்தியாளர்... பொங்கியெழுந்த நெட்டிசன்கள்... கணவர் கண்டனம்

மும்பை: நடிகை சன்னி லியோனை அவமதிப்பு செய்யும் வகையில் ஆபாசமான கேள்விகளைக் கேட்டதாக பத்திரிகையாளர் ஒருவர் மீது சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆபாசப் படங்களில் நடித்து உலகளவில் பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இந்தியா வந்த இவர், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார்.

தமிழில் வடகறி படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடிய சன்னி லியோன், தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார்.

கூகுள் தேடலில்...

கூகுள் தேடலில்...

கடந்தாண்டு இந்திய அளவில் பிரதமர் மோடியைப் பின்னுக்குத் தள்ளி கூகுள் தேடுதலில் அதிகமாக தேடப்பட்டவர் என்ற பெருமைக்குரியவர் சன்னி லியோன்.

சர்ச்சை பேட்டி...

சர்ச்சை பேட்டி...

இந்நிலையில், சமீபத்தில் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் பேட்டியளித்திருந்தார். அப்போது, சன்னி லியோனைப் பேட்டியெடுத்த பத்திரிகையாளர், ‘பணத்துக்காகத்தானே நீங்கள் இப்படி ஒரு செக்ஸ் வாழ்க்கை வாழ்ந்தீர்கள்?' என்பன உள்பட பலக் கேள்விகளைக் கேட்டார்.

பதிலடி...

பதிலடி...

இதற்குப் பதிலளித்த சன்னி லியோன், நீங்கள்கூட பணத்துக்காகத்தானே என்னைப் பேட்டி எடுக்கிறீர்கள்?'' என்று கேட்டு மடக்கினார்.

பெருமை...

பெருமை...

மேலும், ‘‘என் வாழ்க்கையில் நான் எதற்காகவும் வருத்தப்பட்டது இல்லை. நான் ஆபாச படங்களில் நடித்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.

வேதனை...

வேதனை...

ஏனென்றால், அதுதான் என்னை இப்படிப்பட்ட நல்லதொரு இடத்துக்குக் கொண்டுவந்து உள்ளது. ஆனால், என்னைப் பற்றிய சீப்பான சில கமெண்ட்கள் வரும்போது, கொஞ்சம் வேதனையாகத்தான் இருக்கிறது.

நானும் மனுஷி தான்...

நானும் மனுஷி தான்...

நானும் ஒரு மனுஷிதானே... எனக்கும் உணர்வுகள் இருக்கத்தானே செய்யும். பல திருமணமான பெண்கள், என்னைப் பார்த்துப் பயப்படுவதாகச் சொல்கிறார்கள். தங்கள் கணவர்களை என்னிடமிருந்து பாதுகாப்பதாகச் சொல்கிறார்கள்.

அழகான கணவர்...

அழகான கணவர்...

பெண்களே, எனக்கு உங்களின் கணவர்கள் வேண்டாம். ஏனென்றால், எனக்கு அழகான, செக்ஸியான கணவர் இருக்கிறார். அவர் மிகவும் புத்திசாலி' எனப் பதிலளித்தார்.

கேள்விக்கணை...

கேள்விக்கணை...

தொடர்ந்து பத்திரிகையாளரின் கேள்விகளுக்கு சிரித்தபடியே சன்னி லியோன் பதிலளித்த போதும், சில கேள்விகளுக்கு பதிலளிக்க தடுமாறினார். சன்னி லியோனின் இந்தப் பேட்டி சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமர்சனம்...

விமர்சனம்...

பெண் என்றும் பாராமல் ஆபாசமாக கேள்விகளைக் கேட்ட பத்திரிகையாளர் மீது விமர்சனங்கள் அதிகரித்தன. அவர் சன்னி லியோனை அவமதிக்கும் வகையில் கேள்விகள் கேட்டதாக கண்டனங்கள் எழுந்தன.

கண்டனம்...

கண்டனம்...

இந்நிலையில், சன்னி லியோனின் கணவர் டேனியல் வெபரும் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளரின் செயலைக் கண்டித்துள்ளார். பேட்டி எடுத்தவர் சன்னி லியோனை அவமதிக்கும் விதமாக பேட்டி எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ள அவர், நெறிமுறைகளை மதிக்காமல் அந்த பேட்டி வீடியோவை வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.

வருத்தம்...

வருத்தம்...

ஆனபோதும், இந்தப் பிரச்சினையை சன்னி லியோன் சிறப்பாக கையாண்டதாக பாராட்டியுள்ள டேனியல், இருந்தாலும் இந்த அவமதிப்பு பேட்டி குறித்து சன்னி லியோன் வருத்தப்பட்டதாகக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X