என்னது அந்த பிரபல கல்லூரியில் பி.ஏ. படிக்கப் போறாங்களா சன்னி லியோன்.. பதற வைத்த விண்ணப்பம்?

மும்பை: நடிகை சன்னி லியோன் பி.ஏ. பட்டப் படிப்பை படிக்கப் போவதாக கல்லூரியில் ஒட்டப்பட்ட சேர்க்கை பட்டியல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

Sunny Leone Chops her Finger | Daniel Weber | Sunny Prank

ஆபாச பட நடிகையாக இருந்து, பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார் நடிகை சன்னி லியோன்.

கொல்கத்தாவின் அசுடோஷ் கல்லூரியில் வியாழக் கிழமை ஒட்டப்பட்ட அந்த சேர்க்கை பட்டியலில், சன்னி லியோன் பெயர் முதலிடத்தை பிடித்து இருந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எப்பவுமே ஃபர்ஸ்ட்

எப்பவுமே ஃபர்ஸ்ட்

சன்னிலியோன் இந்தியாவில் இந்த பெயரை தெரியாத ஆளே இருக்க மாட்டார்கள். பிட்டு படத்தில் நடித்தும் பிரபலம் ஆகலாம் என்பதை பல முறை கூகுள் டிரெண்டிங்கில் அதிகம் தேடப்பட்ட நபர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்து பறைசாற்றியவர். இப்போ பிரபல கல்லூரியின் மாணவர் சேர்க்கை பட்டியலிலும் இவர் தான் ஃபர்ஸ்ட்.

4 பாடங்களில் செஞ்சுரி

4 பாடங்களில் செஞ்சுரி

அதுவும் ஒண்ணும் சும்மா இல்ல, பன்னிரண்டாம் வகுப்பில் 4 படங்களில் நூற்றுக்கு நூறு பெற்று அந்த இடத்தை பிடித்துள்ளார் ஆக்கும். கொல்கத்தாவில் உள்ள அசுடோஷ் கல்லூரியில் பி.ஏ. ஹானர் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பெயர் பட்டியலில், எந்தவொரு கிராஸ் வெரிஃபிகேஷனும் செய்யப்படாமல், சன்னி லியோனுக்கு முதல் சீட்டு வழங்க அந்த கல்லூரி தயாரானது தான் வேடிக்கையே..

மாணவர்கள் அட்டகாசம்

மாணவர்கள் அட்டகாசம்

இந்த செய்தி அறிந்ததும் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நெட்டில் போட்டு விட்டனர் மாணவர்கள். சன்னி லியோன் பெயராச்சே கொரோனா வைரஸை விட வேகமாக பரவாத பின்ன.. தவறை உணர்ந்த கல்லூரி நிர்வாகம், உடனடியாக ஏபிசிடி எனும் பெயரை போட்டு, எந்தவொரு மாறுதலும் செய்யாமல் மற்றொரு போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

விசாரணை எடுக்கப்படும்

விசாரணை எடுக்கப்படும்

யாரோ வேண்டுமென்றே இப்படியொரு காரியத்தை பக்காவா பிளான் போட்டு செய்துள்ளனர் என தெரிவித்துள்ள கல்லூரி நிர்வாகம், இது தொடர்பான விசாரனை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளது. ஏற்கனவே சன்னி தியோலுக்கு பதிலாக மக்களவை தேர்தலில் சன்னி லியோன் ஜெயித்தார் என செய்திவாசிப்பாளர் சொன்னது பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X